எமிரேட்ஸிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவை அதிகரிப்பு – எதிஹாட் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமான சேவை அளிக்கும் நிறுவனமான "எதிஹாட்" அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
துபாய் போன்ற பெருநகரங்களுக்கு தொடர் பயணங்களை மேற்கொள்ளும் தொழிலதிபர்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவினை எதிஹாட் அறிவித்துள்ளது.
அதன்படி, கொச்சி, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கான சேவை அதிகரிக்கப்படவுள்ளது.
சென்னை மற்றும் கோழிக்கோட்டிற்கு இன்று முதல் இரண்டு விமானங்களும், அக்டோபர் முதல் தேதி முதல் ஹைதரபாத்துக்கு அதிக விமானங்களும் இயக்கப்பட உள்ளன.
இந்த அதிகரித்த விமான சேவையின் மூலம் வர்த்தகர்கள் எளிதாக தங்களுடைய வர்த்தக ரீதியான தொடர்புகளை ஐக்கிய அரபு நாடுகளுடன் அதிகரித்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications