ஈரான் தலைநகரை உடனே காலி செய்யுங்கள்.. மக்களுக்கு டிரம்ப் உத்தரவு! அணுகுண்டு போட அமெரிக்கா முடிவு?

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து மக்கள் எல்லோரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா குண்டு போட போகிறதோ.. முக்கியமாக அணு குண்டு போட போகிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

டிரம்ப் உடனடியாக டெஹ்ரானை காலி செய்யுமாறு ஈரான் நாட்டு மக்களை வலியுறுத்தினார். ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது.

Israel Iran

ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன்.. ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள். உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள் என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார். ஈரான் மீது பயங்கர தாக்குதல் திட்டத்தை டிரம்ப் போட்டிருக்க வாய்ப்புள்ளது. ஈரானை அமெரிக்கா தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் தொடர்ந்து மன்றாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரானை அமெரிக்கா தாக்க வேண்டும். இல்லையென்றால் வரும் காலத்தில் ஈரான் அமெரிக்காவை தாக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார். இந்த நிலையில்தான் டிரம்ப் இப்படி பேசி இருக்கிறார். இதனால் நெதன்யாகுவின் கோரிக்கையை ஏற்று டிரம்ப் ஈரானை தாக்க உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா குண்டு போட போகிறதோ.. முக்கியமாக அணு குண்டு போட போகிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

டிரம்ப் ஈரான் அணு ஆயுதம்:

தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.

ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.

இதைத்தான் இஸ்ரேல் தாக்க முயற்சி செய்கிறது. நேற்று இதில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான சீக்ரெட் திட்டங்களை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மேற்கொண்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். ஈரான் உள்ளே அவர்களின் அணு திட்டங்களை சேதப்படுத்தும், தோல்வி அடைய செய்யும் பணிகளை இஸ்ரேல் தனது உளவாளிகள் மூலம் செய்ததாகவும்.. மொசாத் உதவியுடன் இந்த தாக்குதல்களை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரான் கைக்கு முழுமையாக அணு ஆயுதம் கிடைக்கும் அவர்களை தாக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. அதற்கு டிரம்பும் தற்போது தயாராகி வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இதனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+