முதுகில் குத்தி விட்டார்.. சும்மா விட மாட்டேன்.. வாக்னர் குழுவுக்கு கண்கள் சிவக்க புதின் வார்னிங்!
மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த வாக்னர் குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராகவே வாக்னர் படை திரும்பியிருப்பது புதினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனால், இன்று நாட்டு மக்களுக்கு டிவியில் தோன்றி புதின் உரையாற்றியுள்ளார்.
ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு முயற்சி செய்தது. உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால் ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என பயப்பட்ட புதின், உடனடியாக அந்த நாட்டின் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்தன.

உக்ரைனின் பல பகுதிகளை கைபற்றினாலும் கூட ரஷ்யாவால் நினைத்தது போல போரில் வெற்றி பெற முடியவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவியை வழங்கியது. இதனால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு கடும் சவால் கொடுத்தது. இதனால், ஓராண்டை கடந்தும் ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவுக்கும் பெரும் பொருளாதார இழப்பை இந்த போர் கொடுத்துள்ளது.
புதின் ஆவேச பேச்சு: உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு பெரும் உறுதுணையாக வாக்னர் குழு இருந்தது. இந்த வாக்னர் குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. வாக்னர் குழு தலைவராக இருக்கும் யெவ்ஜெனி ப்ரிகோஸின் மற்றும் வாக்னர் குழு வீரர்கள் மீது ரஷ்ய அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாகவும் இதனால், வெய்ஜோனி பிரிகோஸ் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் ராணுவதலைமையை வீழ்த்த தயாராக இருப்பதாகவும் 25 ஆயிரம் பேரும் இறப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டவ் பகுதிக்குள் எங்கள் படை நுழைந்து விட்டதாக வாக்னர் குழு ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்னர் குழுவின் இந்த முடிவு ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் தோன்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது:-
வாக்னர் குழுவின் தலைவர் முதுகில் குத்திவிட்டார். டோன்பாஸ் பகுதிக்கு விடுதலை பெற்று கொடுத்த வாக்னர் குழுவினர் ஹீரோக்கள். நமக்கு ஒற்றுமைதான் தேவை. நாம் தேசத்துரோகத்தை எதிர்கொண்டு வருகிறோம். வாக்னர் குழுவின் தலைவர் செயல்பாடு துரோகத்திற்கு இணையானது. ரஷ்ய மக்களை பாதுகாப்பில் உறுதியாக இருக்கிறேன். ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் ஒவ்வொருவரும் துரோகிகள்தான்.
யார் இந்த வாக்னர் குழு: கலகத்தில் ஈடுபடும் ஒவ்வொரும் தண்டிக்கப்படுவது நிச்சயம்" என ஆவேசமாக பேசியுள்ளார். ரஷ்யாவில் இயங்கி வரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்புதான் இந்த வாக்னர் ஆயுதக்குழு. ரஷ்யா மட்டும் இன்றி லிபியா, மாலி, சிரியா பல இடங்களிலும் இந்த குழு உள்நாட்டு போருக்கு அரசுக்கு ஆதரவாக ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது.
சட்டத்திற்கு புறம்பாகவே இந்தக் குழு இயங்குகிறது. ரஷ்யாவிலும் கூட தனியார் ராணுவ ஒப்பந்த குழுக்களுக்கு சட்டப்பூர்வ தடை இருக்கிறது. ஆனாலும் புதினின் மறைமுக ஆதரவோடு இந்தக் குழு செயல்பட்டது. இந்த நிலையில் தற்போது ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே வாக்னர் குழு திரும்பியுள்ளது புதினுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications