"ஏதோ தப்பா இருக்கு.." டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல்.. எச்சரித்த ஊழியரை டிஸ்மிஸ் செய்து அலட்சியம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற கப்பல் மாயான நிலையில், இது குறித்து சில பரபர தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    Titanic கப்பலை பார்க்க போனவங்க மாயம்

    கடந்த 1912ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே அட்லான்டிக் பெருங்கடலில் மூழ்கியது.. கனடாவில் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது.

    டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் பகுதியில் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளனர். மேலும், அதன் சிதிலமடைந்த பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஒரு நீர்மூழ்கிக் கப்பலிலும் அழைத்துச் சென்று வருகிறார்கள்.

    துண்டிப்பு: அப்படிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகளுடன் கப்பல் கிளம்பிய நிலையில், சற்று நேரத்திலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருந்த நிலையில், அதைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் அந்தக் கப்பல் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்கக் கடலோர காவல்படை, கனடா நாட்டின் ராணுவ விமானங்கள், பிரான்ஸ் கப்பல்கள் தீவிரமாகத் தேடி வருகின்றன.

     Experts Raised Safety Concerns About OceanGate Titanic submarine In 2018

    இந்த நீர்மூழ்கிக் கப்பலில் அதன் பைலட் மற்றும் நான்கு பயணிகள் இருக்கிறார்கள். உள்ளே சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ள நிலையில், தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. 22-அடி (6.7-மீட்டர்) நீளமுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் ஓஷன்கேட் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இது முதலில் 2018 டிசம்பரில் 4,000 மீட்டர் (13,100 அடி) வரை பயணித்துள்ளது.

    அலட்சியம்: பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், 2021இல் இந்த நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 3,800 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் மூழ்கிக் கிடக்கும் பகுதிக்கு முதலில் சென்று திரும்பியது. இந்தாண்டு மட்டும் இதுபோல 18 பயணங்களைச் செல்ல திட்டம் போட்டுள்ளனர். ஆனால், இப்போதே இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது. இருப்பினும், இது தவிர்க்கக் கூடியது தான் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அலட்சியம் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகப் பலரும் சாடுகின்றனர்.

    நீர்மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பும் பாதுகாப்பு அமைப்புகளும் முறையாக இல்லை என ஏற்கனவே முன்னாள் ஊழியர் ஒருவர் கவலை தெரிவித்திருந்தார். அது தொடர்பாக விரிவான ரிப்போர்ட்டையும் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். ஆழமான நீரின் தீவிர அழுத்தங்களைத் தாங்கும் வகையில் டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

    எச்சரிக்கை: இந்த ரிப்போர்ட் கிடைத்த மறுநாளே ஓஷன்கேட் நிறுவனம் தனது வல்லுநர்கள் அழைத்து ஆலோசித்து உள்ளது. டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை ஏற்க முடியாது என்றும் அதில் பயணிப்பது ஆபத்தானது என்றும் திட்டவட்டமாக அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நிறுவனம் சம்மந்தப்பட்ட நபரை டிஸ்மிஸ் செய்துவிட்டது.

    இதையடுத்து 2018இல் ஓஷன்கேட் நிறுவனம் அந்த ஊழியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. நிறுவனத்தின் ரகசிய தகவல்களைப் பிற நபர்களுடன் ஆலோசித்தாக வழக்கு தொடரப்பட்டது. பதிலுக்கு அந்த ஊழியரும் வழக்கு தொடர்ந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அந்த ஊழியர், தரக் கட்டுப்பாடு மற்றும் அப்பாவி பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் பிரச்சினைகளை வெளியே வராமல் தடுக்கவே அந்த நிறுவனம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகப் பதிலுக்கு வழக்கு தொடர்ந்தார்.

    இப்போது அவர் எச்சரித்ததை போலவே நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியுள்ளது. உள்ளே ஒரு பைலட் மற்றும் 4 பயணிகள் இருந்த நிலையில், அவர்களை எப்படியாவது உயிருடன் கண்டுபிடிக்க மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+