பேஸ்புக்கில் போட்ட செல்பியால் 59 ஆயிரம் “பணால்”- ஆஸ்திரேலிய இளம்பெண்ணின் சோகக்கதை!
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய பெண் ஒருவர் ஒரே ஒரு செல்பியால் 59 ஆயிரம் ரூபாயை இழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள அஸ்காட் ரேஸ்கோர்சில் 20 டாலர் பெட் கட்டி விட்டு, தான் பெட் கட்டிய குதிரை ஜெயிப்பதற்காக சேன்டலி என்ற இளம்பெண் தனது நண்பர்களுடன் காத்திருந்தார்.

அவர்கள் பந்தயம் கட்டிய குதிரை ஜெயிக்கவே 900 டாலருக்கான பரிசுக்கூப்பன் சேன்டலிக்கு வழங்கப்பட்டது.
கூப்பனுடன் செல்பி:
பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் அந்த பரிசுக்கூப்பனுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்ட அவர், அடுத்த நொடியே அதை பேஸ்புக்கிலும் அப்லோட் செய்தார்.
அய்யோ போச்சே:
15 நிமிடம் கழித்து மனதில் குதூகலத்துடன் பரிசுப்பணத்தை வாங்கப் போனவருக்கு அதிர்ச்சி. "உங்கள் டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டோம்" என்ற பரிசுப் பணம் வழங்கவேண்டிய அதிகாரி சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
பார்கோடை வைத்து விளையாட்டு:
அப்புறம்தான் சேன்டலிக்கு விஷயமே புரிந்தது. அவர் எடுத்த செல்பியில் பதிவாகியிருந்த பரிசுக்கூப்பன் பார்கோடை வைத்து யாரோ கோல்மால் செய்து பணத்தை பெற்று விட்டனர்.
புலம்பலில் சேன்டலி:
நிச்சயம் என் பேஸ்புக் நண்பர்களில் ஒருவர்தான் இந்த காரியத்தை செய்திருக்கணும் என்று நண்பர்களிடம் புலம்பி வருகின்றாராம் சேன்டலி.












Click it and Unblock the Notifications