"எங்கேயும் காதல்".. ஜாதி, மதம், எல்லை கடந்து பாகிஸ்தான் இளைஞரை கரம்பிடித்த அமெரிக்க பெண்
இஸ்லாமாபாத்: ஃபேஸ்புக் பழக்கத்தின் மூலமாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், தனது காதலுக்காக ஜாதி, மதம், நாட்டைக் கடந்து தனது காதலனான பாகிஸ்தான் இளைஞரை அமெரிக்க பெண் கரம் பிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிண்டி ராஸ்முஸ்டன் என்ற அந்த அமெரிக்க பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சுலேகா என்று மாற்றிக் கொண்டார்.
அமெரிக்கா நாட்டின், இலினாய்ஸ் மாகாணம் ஸ்பிரிங்பீல்ட் என்ற பகுதியை சேர்ந்தவர் மிண்டி ராஸ்முஸன். 47 வயதான மிண்டிக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த சஜித் செப் கான் என்ற 31 வயது இளைஞருக்கும் ஃபேஸ்புக் மூலமாக ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நீண்டநாட்களாக நண்பர்களாப் பழகி பேசி வந்துள்ளனர். இந்த நட்பானது, நாளடைவில் இருவருக்கிடையேயும் காதலாக மாறியுள்ளது.

பெற்றோர் சம்மதம்
இதையடுத்து, மிண்டி ராஸ்முஸனும், சஜித் செப் கானும் தங்களது காதல் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்து, திருமணத்துக்கும் ஒப்புதல் வாங்கியுள்ளனர். நாடு, மதம் என அனைத்தையும் தாண்டி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து 90 நாட்கள் விசா மூலமாக மிண்டி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
இஸ்லாம் முறைப்படி திருமணம்
அங்கு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் மிண்டி ராஸ்முஸனை, சஜித் செப் கான் வரவேற்று தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். சஜித்தின் உறவினர்கள் மிண்டிக்கு பரிசுகளை வழங்கி இருவரையும் வாழ்த்தினர். மிண்டி ராஸ்முஸ் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரையும் சுலேகா என்று மாற்றிக் கொண்ட நிலையில், சுலேகாவுக்கும், சஜித் செப் கானுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பாகிஸ்தான் அழகான நாடு
இதுகுறித்து சுலேகா கூறுகையில், பாகிஸ்தான் மிகவும் அமைதியான, அழகான நாடு. எங்களது திருமணத்துக்கு குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு முழு ஆதரவு தெரிவித்தனர். பாகிஸ்தானின் கலாசாரம், இயற்கை அழகை நேரில் காண அந்நாட்டிற்கு அனைவரும் நேரில் செல்ல வேண்டும். சஜித் செப் கான் மிகவும் அன்பான, பணிவான நபர். அவருடைய அக்கறையும், மரியாதையுமான நடத்தையும் தான் என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.
தனிப்பட்ட விருப்பம்
சஜித் செப் கான் கூறுகையில், சுலேகா இஸ்லாம் மதத்திற்கு மாறியது அவருடைய தனிப்பட்ட முடிவு. யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications