Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவுக்கு இரண்டாவது கல்யாணம்.. ரூ.11 லட்சம் பரிசுப் பணத்துக்காக சீனாவையே அசர வைத்த 10 வயது மகன்

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: யாரும் எதிர்பார்க்காத ஒரு வழக்கு திடீரென கோர்ட்டுக்கு வந்தது.. வழக்கு தொடர்ந்தவர் ஒரு பெரியவர் கிடையாது.. வெறும் 10 வயது சிறுவன் தான். சிறுவனின் குற்றச்சாட்டு கேட்டு நீதிபதியும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.. ஒரு குடும்பத்தின் உள்ளேயே நடந்த இந்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது? யாரிந்த சிறுவன்?

அந்த சிறுவனுக்கு 10 வயதுதான் ஆகிறது.. பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.. அந்தச் சிறுவன் தனது அப்பாவுடன் வசித்து வந்தான். இந்நிலையில், சீனர்களின் பாரம்பரிய சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, உறவினர்கள் சிறுவனுக்காக 80 ஆயிரம் யுவான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் ரூபாய் பணத்தை பரிசாக வழங்கியுள்ளனர்.

Father Takes Prize Money

பரிசுத் தொகை

இந்த தொகை, தந்தையின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இந்த பணம் சிறுவனின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அப்பா, மகனின் பரிசுத் தொகையை தனக்காக எடுத்து கொண்டாராம்.. அதுவும், தன்னுடைய இரண்டாவது திருமண செலவிற்காக செலவு செய்து கொண்டாராம்..

தன்னுடைய பரிசு பணத்தை அப்பா, 2வது கல்யாணத்துக்கு செலவுசெய்து கொண்டாரே என்று சிறுவன் அதிர்ச்சி அடைந்தான்.. தனது தந்தை மீது வைத்த நம்பிக்கை முழுமையாக உடைந்தது. அப்பாவிடம் தன்னுடைய பணத்தை தரும்படி சிறுவன் கேட்டுள்ளான்.. ஆனால் பணத்தை திருப்பித் தர முடியாது என்று அப்பா கறாராக சொல்லிவிட்டாராம்..

அப்பாவின் 2வது திருமணம்

அதனால் வேறு வழியின்றி சிறுவன் நீதிமன்றத்தை நாடினான். கோர்ட்டுக்கு இந்த கேஸ் சென்றதுமே, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சட்ட வல்லுநர்கள் பலரும் சிறுவனுக்கு ஆதரவாகத் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த 80 ஆயிரம் யுவான் முழுத் தொகையையும் சிறுவனுக்கு திருப்பித் தர அப்பாவுக்கு அதிரடியாக தற்போது உத்தரவிட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சொத்துக்களைக் கையாள்வதில் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது..

மகன் தொடர்ந்த வழக்கு

சீனாவின் சிவில் சட்டத்தின்படி, சிறார்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பணம் அவர்களது சொந்த சொத்தாக கருதப்படுகிறது. பெற்றோர்கள் சட்டப்பூர்வ பாதுகாவலர்களாகச் சிறுவர்களின் சொத்துக்களை நிர்வகிக்க உரிமை பெற்றிருந்தாலும், அந்த பணத்தை மருத்துவத் தேவை அல்லது கல்வி போன்ற சிறுவர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மற்றபடி, பாதுகாவலரின் சொந்த செலவுகளுக்கு, அதுவும் குறிப்பாக திருமணத்திற்காகச் சிறுவனின் சேமிப்பைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.. இந்த தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.. தந்தை தனது தவறை உணர்ந்து பணத்தைத் திருப்பிச் செலுத்த நீதிமன்ற உத்தரவின்படி ஒப்புக்கொண்டுள்ளார்..

ரூ.11 லட்சம் பணம்

சீன கலாச்சாரத்தில் "ஹோங்க்பாவோ" எனப்படும் சிவப்பு நிற உறையில் பணம் வைத்து பெரியவர்கள் சிறுவர்களுக்கு வாழ்த்து பரிசாக வழங்குவார்களாம்.. இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக அங்கு தொடர்கிறது. ஆனால், அந்தப் பணத்தை பெற்றோர்கள் கையாள்வதில் உள்ள சிக்கல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனது பரிசுப் பணத்தைத் தந்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்தில் 10 வயது சிறுவன் வழக்குத் தொடர்ந்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி, பலரையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+