ரஷ்ய ரயில் நிலையத்தில் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல்- 13 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் தற்கொலைப்படைத் தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு காகாஸஸ் பகுதியில், கடந்த 3 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் இது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் தெற்கு ரஷ்யாவில் கடந்த 3 நாட்களில் நடந்த 2வது தாக்குதல் இது. சமீபத்தில்தான் சோச்சி என்ற நகரில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
வோல்கோகிராட் யில் நிலையத்தின் நுழைவாயிலுக்கு வந்த பெண் தற்கொலைப்படைத் தீவிரவாதி, அங்குள்ள மெட்டல் டிடெக்டர் கருவி முன்பு நின்றபடி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குண்டுவெடிப்பில் ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதி சேதமடைந்து போனது.
வோல்கோகிராட், சோச்சி என்ற வட கிழக்கு நகரிலிருந்து கிட்டத்தட்ட 690 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரில்தான் பிப்ரவரி 7ம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்தப் போட்டியை அதிபர் புடின் தனது கெளரவப் பிரச்சினையாக கருதுகிறார். இந்த நிலையில்தான் ரயில் நிலையக் குண்டுவெடிப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications