For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நரகம்".. ஃபிபா உலகக் கோப்பையில் இப்படி நடந்ததே இல்லை.. கத்தாரில் கொதிக்கும் பேன்ஸ்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

டோஹா: கத்தாரில் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில் ரசிகர்கள் பலர் இந்த அனுபவத்தை நரகம் என்று விளக்கி உள்ளனர். அவர்கள் இதை நரகம் என்று அழைப்பதற்கு பின் முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.

ஃபிபா உலகக் கோப்பையில் இதுவரை நடக்காத சில விஷயங்களை நீங்கள் மைதானத்திற்கு சென்றால் இந்த முறை கத்தாரில் பார்க்க முடியும். கத்தாரில் இந்த உலகக் கோப்பைக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் மைதானங்களில் எல்லாம் மிகப்பெரிய அளவில் மோட்டார் அமைக்கப்பட்டு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருப்பார்கள்.

மைதானத்தில் இருக்கும் புற்கள் மீது பல டன் லிட்டர் தண்ணீரை இவர்கள் பாய்ச்சிக்கொண்டு இருப்பார்கள். பொதுவாகவே கால்பந்து மைதானங்களில் இப்படி தண்ணீர் அடிப்பது சகஜம்தான்.

ஃபிபா போட்டியை மட்டுமல்ல.. இதயங்களையும் வென்ற ஜப்பான்.. உலகமே கற்றக்கொள்ள வேண்டிய ஒழுக்கம்! ஃபிபா போட்டியை மட்டுமல்ல.. இதயங்களையும் வென்ற ஜப்பான்.. உலகமே கற்றக்கொள்ள வேண்டிய ஒழுக்கம்!

தண்ணீர்

தண்ணீர்

இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். ஆனால் ஃபிபா கால்பந்து நடக்கும் கத்தாரில் இப்போது மிக மிக அதிக அளவில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இருக்கிறது. 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் இந்த மைதானத்தில் இருக்கும் புற்கள் கருகிவிட கூடாது. பச்சையாகவே இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அடிக்கடி நீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் மேட்ச் நடக்கும் நேரம் போக மற்ற பெரும்பாலான நேரங்களில் இதில் தண்ணீர் ஊற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அளவில் கத்தாரில் வெப்பநிலை நிலவி வருகிறது.

நகரம்

நகரம்

சரி தரையில் இருக்கும் ஓரறிவு புல்லிற்கே இப்படி இருக்கும் என்றால் ஆறறிவு மனிதர்களுக்கும் எப்படி இருக்கும். இந்த வானிலையில் வளராத இதைவிட குளிர்ந்த வானிலையில் வளர்ந்த இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாட்டை சேர்ந்தவர்களுக்கு எப்படி இருக்கும். இதுதான் இந்த ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையை நரகம் ஆக்கி உள்ளது. அதன்படி ஃபிபா பார்க்க வரும் ரசிகர்களுக்காக டோஹாவிற்கு வெளியே ரவாத் அல் ஜான்னியா என்ற பகுதியில் மிகப்பெரிய பேன்ஸ் நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஃபிபா

ஃபிபா

பல ரசிகர்கள் தங்கும் வகையில் இந்த புதிய ரசிகர்கள் சிட்டி உருவாக்கப்பட்டு உள்ளது. கத்தாரில் இருக்கும் விதிகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டு, ரசிகர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று இந்த நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவேதான் தற்போது ரசிகர்களுக்கு நகரமாக மாறி உள்ளது. காரணம் இங்கே மிக மிக குறைவான வசதிகளே உள்ளன. இங்கிருந்து அருகில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட 30 நிமிடம் காரில் செல்ல வேண்டும்.

மோசமான நிலை

மோசமான நிலை

அங்கு நடுகாட்டில் மரங்கள் இல்லாத பாலைவனம் போன்ற பகுதியில் இந்த சிட்டியை அமைத்து உள்ளனர். கேபின் போன்ற வடிவத்தில் கண்டெயினர்களில் பெயிண்ட் அடித்து உள்ளே இரண்டு பெட் வைத்து உருவாக்கி உள்ளனர். ஒரு கண்டெயினரில் இரண்டு பேர் தாங்கும் வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உள்ளேயே உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் உணவின் தரம் சரியில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் வைத்து உள்ளனர். அதோடு கண்டெயினரில் வெப்பம் மிக மோசமாக உள்ளது. ஒரே ஒரு சின்ன ஏசியை இவர்கள் உள்ளே பொருத்தி உள்ளனர்.

என்ன நிலைமை இருக்கிறது?

என்ன நிலைமை இருக்கிறது?

அந்த ஏசியும் பெரிதாக வெப்பத்தை குறைக்கவில்லை. இந்த கண்டெயினர் உள்ளே இருப்பது நரகத்திற்கு உள்ளே இருப்பது போல இருக்கிறது. அதோடு இந்த இடத்தில் கட்டுமானத்தை முழுதாக முடிக்கவில்லை. அவசர அவசரமாக இந்த பணிகளை செய்து உள்ளனர். அதனால் இந்த இடம் இன்னும் கட்டுமான பகுதி போலவே உள்ளது. இன்னும் சிமெண்ட் காற்றுடன் பார்க்கவே கொடூரமாக உள்ளது. பல இடங்களில் கிளாஸ், கம்பிகள் சிதறி கிடைக்கின்றன. தூசிகள் நகரமாக இந்த இடம் உள்ளது. அதேபோல் இங்கே தண்ணீர் தீர்ந்துவிட்டால் உடனே கிடைப்பது இல்லை.

தண்ணீர் இல்லை

தண்ணீர் இல்லை

நல்ல குடிநீர் கிடைக்க 1 மணி நேரம் நடக்க வேண்டியது உள்ளது. ரிஸ்ட் பேண்ட் இல்லாமல் தண்ணீர் வாங்க முடியாது. ஆனால் அந்த பேன்ட் வாங்குவதும் கடினம். இங்கே விளையாட்டு, தியேட்டர் அரங்கம் , ஜிம் போன்ற வசதிகளை செய்து தருவதாக கத்தார் விளம்பரம் கொடுத்து இருந்தது. ஆனால் இங்கே வந்து பார்த்தால் அப்படி எதுவுமே இல்லை. நிலைமை இங்கே மிக மோசமாக இருக்கிறது. இவர்கள் கொடுத்து இருக்கும் சிறு ஏசியும் கூட பெரும்பாலான நேரங்களில் வேலை செய்வது இல்லை. ஆனால் இங்கே தங்குவதற்கு ஒரு இரவிற்கு 26,948 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆம் இவ்வளவு தொகையை அள்ளிக்கொடுத்தால்தான் இங்கே தங்க முடியும்.

விலை அதிகம்

விலை அதிகம்

மற்ற கத்தார் ஹோட்டலில் இந்த நேரத்தை பயன்படுத்தி 70 ஆயிரத்திற்கு மேல் வாடகை உயர்ந்து உள்ளது. இங்கே தங்க வேண்டும் என்றால் ஜெயிலில் இருப்பது போல பல விஷயங்களை சகித்துக்கொள்ள வேண்டும். அதோடு இந்த இடத்தை ஹைவேயில் கட்டி இருக்கிறார்கள். அதனால் வாகனங்கள் செல்லும் புழுதி எப்போதும் இங்கே இருக்கும். கடும் வெயிலில் கண்டெயினரில் வாழ்வதை யோசித்து பாருங்கள். உள்ளே கண்டெயினரை கைதவறி தொட்டால் கூட கை பழுத்துவிடும். அந்த அளவிற்கு மோசமாக நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் இதை போட்டு எடுத்து போடும் நபர்களை மிரட்டுகிறார்கள். கத்தாரில் இருந்து வெளியேற்றுவோம் என்று மோசமாக மிரட்டுகிறார்கள். ரசிகர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க முடியாத இவர்கள் கால்பந்து தொடரை பின்னர் நடத்துவது ஏன் என்ற கேள்வியை ரசிகர்கள் பலர் எழுப்பி உள்ளனர்.

English summary
FIFA world cup 2024: Why fans are not happy with village given to them for the stay?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X