ஊதுபத்தி ஏற்றும் போது சுற்றுலா பயணியின் சிறு தவறு! சீனாவின் 1500 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீவிபத்து
பெய்ஜிங்: சீனாவில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான கோயிலில் சுற்றுலா பயணி ஒருவர் செய்த தவறால் கட்டடத்தின் கூரை தீப்பிடித்து எரிந்தது. இந்த தீவிபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கோயிலின் மேற்கூரை எரிந்து கரும்புகை வெளியேறியது. கோயில் வளாகமும் சேதமடைந்தது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் கிறிஸ்து பிறப்புக்கு பின்னர் 536 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த கோவிலின் துணை கட்டடமும் அதன் அருகே அமைந்துள்ளது. அந்த கட்டடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு செல்வதுண்டு. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் சுற்றுலா பயணி ஒருவர் மெழுகுவர்த்தியை ஏற்றியுள்ளார்.
அத்துடன் நறுமணம் தரும் ஊதுபத்தியையும் ஏற்ற முயன்ற போது திடீரென தீவிபத்து நடந்துள்ளது. இதனால் தீ மூண்டு மாடி கட்டடத்தின் மேலிருந்து கீழ் பகுதி வரை மளமளவென பரவியது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் கட்டடத்தின் கூரையின் உள்ள சில மர பொருட்கள் தீயில் எரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் அடர்த்தியான கரும்புகை எழுந்தது. மேலும் கட்டடமும் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த தீவிபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. அது போல் அந்த கோயிலை சுற்றியுள்ள வனப்பகுதிக்கும் பரவவில்லை. கோயிலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டப்பட்ட இந்த துணை கட்டடத்தில் எந்த கலாச்சார நினைவு சின்னங்களும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெட்டதிலும் நல்லது என்பது போல் இந்த தீவிர தீவிபத்தால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இந்த தீவிபத்து சம்பவம் கடந்த 12 ஆம் தேதி நிகழ்ந்தது. தீயணைப்பு துறையினர் தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
மேலும் அந்த கட்டடத்தின் இடிபாடுகளையும் தீயினால் எரிந்த பொருட்களையும் அப்புறப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த கட்டடத்தை மீண்டும் புத்தம் புது பொலிவுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த சுற்றுலா பயணியிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் வேண்டுமென்றே இதை செய்தாரா இல்லை தவறுதலாக நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
சீனாவில் ஏராளமான பழமையான கோயில்கள் காணப்படுகின்றன. அங்கு பெரும்பாலும் 100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் இருக்கும். ஷாலின் கோயில், லிங்யின் கோயில், வெள்ளை குதிரை கோயில், ஜோக்ஹாங் கோயில், தி பிக் வைல்ட் குட் பகோடா என ஏராளமான பழமையான கோயில்கள் உள்ளன.
அது போல் இந்த கோயில் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில் ஜியாங்ஷான் ஏரி இருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான அழகான மரங்கள் மார்ச் முதல் ஏப்ரல் வரை செழிப்பாக இருக்கும். அத்துடன் சுவான்ஷான் தீவில் விலங்குகளையும் இயற்கை அழகையும் ரசிக்கலாம்.
ஹேயாங் மியூசியத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்வேறு விஷயங்களை பார்க்கலாம். பல்வேறு பகுதிகளில் கண்களுக்கு இதமான நிறங்களில் வித்தியாசமான பூக்கள் பூத்துக் குலுங்கும். இந்த அழகை காண கண் கோடி வேண்டும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications