விமானத்திலிருந்து ஏரிக்குள் கொட்டப்படும் ஆயிரக்கணக்கான மீன்கள்.. வாவ் வீடியோ.. என்ன காரணம்?
அமெரிக்காவில் விமானத்தில் இருந்து ஏரிக்குள் கொட்டப்படும் மீன்களின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் விமானத்தில் இருந்து ஏரிக்குள் கொட்டப்படும் மீன்களின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள, உட்டா என்ற மாநிலத்தில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக இப்படி விமானத்தில் மீன்களை கொண்டு சென்று கடலில் போடும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.
இதுகுறித்து தற்போது இணையத்தில் நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளது. விமானத்தில் இருந்து இப்படி மீன்கள் வீசுவது விசித்திரமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. இதை எக்ஸ்டிரீம் பிஷ் ஸ்டாக்கிங் (extreme fish stocking) - தீவிர மீன் சேமிப்பு என்று அழைக்கிறார்கள்.

உட்டா ஏரிகள்
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள, உட்டா என்ற மாநிலத்தில் நிறைய ஏரிகள் உள்ளது. மலை பகுதி என்பதால் இங்கு ஏரிகள் தனி தனியாக இருக்கும். மற்ற நீர் நிலைகளுடன் தொடர்பற்று தனியாக இருக்கும். இதை காண நிறைய சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல், நிறைய பேர் இங்கு மீன் பிடிக்க வருவார்கள்.
|
மீன்களை நிரப்புவார்கள்
இதனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு எப்போதும் இங்கு மீன்கள் தீர்ந்துவிடும். மீண்டும் மீன்கள் உருவாகும் வரை சுற்றுலா பயணிகளை காத்திருக்க வைக்க வேண்டும் என்று இப்படி ஒரு வழக்கத்தை உருவாக்கி உள்ளனர். அதன்படி விமானம் மூலம் மீன்களை தூக்கி கொட்டுகிறார்கள். ஒரு காலத்தில் பெரிய பெரிய கன்டெய்னர்களில் மீன்களை கொண்டுவந்து தண்ணீரில் விட்டுள்ளனர்.
|
எப்படி செய்வார்
இதற்காக விமானத்தில் மிக சிறிய அளவில் இருக்கும் மீன்களை எடுத்து செல்கிறார்கள். அதன்பின் ஏரிகளுக்கு அருகே சென்று, எவ்வளவு தாழ்வாக செல்ல முடியுமோ அவ்வளவு தாழ்வாக சென்று, மீன்கள் இருக்கும் பெட்டியை திறந்து விடுகிறார்கள். இதன் மூலம் எல்லா ஏரிகளுக்கும் மீன்கள் மீண்டும் நிரப்பப்படும்.
|
மீனுக்கு எதுவும் ஆகாதா
இதனால் மீன்களுக்கு எந்த காயமும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. மீன்களின் உடல் வாகு அப்படித்தான், அதே போல் எடை மிகவும் குறைவும் என்பதால் 99 சதவிகித மீன்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
-
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications