அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம்.. முன்னாள் அதிகாரிகள் அறிவிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய குடியரசின் முன்னாள் அதிகாரிகள் பலர், தலிபான்களால் நாடு கைப்பற்றப்பட்ட பின்னர் போரால் பாதிக்கப்பட்ட தங்கள் தேசத்தை விட்டு வெளியேறினர். இந்நிலையில் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம் செயல்படும் என்று அறிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 15 அன்று காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் நாட்டில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நிலையில், அரசுப் படைகளுக்கு எதிராக எளிதாக வென்றனர் தாலிபன்கள். இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தப்பியோடிவிட்டனர். அதில் ஏராளமான அதிகாரிகள் அமைச்சர்களும் அடக்கம் ஆகும்.
இந்நிலையில் சுவிஸில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் பெயரில் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய குடியரசு மட்டுமே மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. வேறு எந்த அரசாங்கமும் முறையான அரசாங்கத்தை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளது.

நாடு கடந்த அரசு
"அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடிவிட்ட நிலையில், ஆப்கான் அரசியலில் அவர் இல்லாததால் அவருக்கு அடுத்தபடியாக உள்ள துணைத் தலைவர் (அம்ருல்லா சலேஹ்) நாடு கடந்த அரசை வழிநடத்துவார்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசு
வெளி காரணிகளால் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் உயர் தலைவ;ரகளுடன் கலந்தாலோசித்த பிறகு ஆப்கானிஸ்தான் அரசு குறித்து அறிவிக்கப்படுவதாகவும். நாடு கடநத அரசாங்கம் நிறுவப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,
Recommended Video

பெயர் இல்லை
அந்த அறிக்கையின்படி, நாடு கடந்த அரசாங்கத்திற்கு நிர்வாக, நீதித்துறை மற்றும் சட்டமன்றம் விரைவில் செயல்படுத்தப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் அனைத்து தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் சாதாரணமாக செயல்படும் என்றும் கூறியுள்ளது. இந்த அறிக்கை கடந்த அரசாங்கத்தின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிற அரசியல்வாதிகளால் எழுதப்பட்டுள்ளது. இவை யாருடைய பெயரும் வெளியிடப்படவில்லை. தலிபான்கள் 57 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட முஹம்மது ஜாஹிர் ஷாவின் காலத்திலிருந்து அரசியலமைப்பை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்கள். இந்த சூழலில் இப்படி ஒரு அறிக்கை வந்துள்ளது.

மோசமான நிலை
இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பே அந்நாட்டின் பொருளாதார சூழல் மோசமாகத் தான் இருந்தது. உலக வங்கியின் கூற்றுப் படி, ஆப்கானிஸ்தானின் 40 சதவீத ஜிடிபி வெளிநாட்டு நிதி உதவிகளிலிருந்து வருகிறது. தாலிபன் அதிகாரத்துக்கு வந்த பின், மேற்குலகம் அந்நாட்டின் சர்வதேச நிதிகளை முடக்கிவிட்டது. இதனால் தாலிபன்கள் சீனா, ரஷ்யா உட்பட மற்ற சில நாடுகளிடம் உதவியை எதிர்பார்க்கிறார்கள். இதனிடையே ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய வங்கியின் ஒன்றின் தலைவர், தமது நாட்டின் வங்கி அமைப்பு முறையே தகர்ந்து போகும் நிலையில் இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பலருக்கு சாப்பிட உணவில்லை என்கிற நிலை உள்ளதால் சீனாவின் உதவியை தாலிபன்கள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications