வேலையை காட்டிய பலேன் ஷா.. நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி அதிரடி கைது!
காத்மாண்டு: நேபாளத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், புதிய பிரதமராக பலேன் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பழமைவாதியான இவர், பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் அமைச்சர்கள் பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கே.பி. சர்மா ஒலி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகா உள்ளிட்டோர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த Generation Z போராட்டத்தை ஒடுக்கியதாகவும், இதில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கைது நடவடிக்கை
பக்தாபூர் குண்டுவில் உள்ள ஒலியின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். லேகாக்கின் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தாபூர் சூர்யவினாயக்கிலிருந்து கைது செய்யப்பட்டார். உள்துறை அமைச்சகத்தின் புகாரை அடுத்து, விசாரணைக்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
முக்கிய அதிகாரிகள்
காத்மாண்டு போஸ்ட் தகவல்படி, முன்னாள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கௌரி பகதூர் கார்க்கி தலைமையிலான ஆணையப் பரிந்துரைகளைச் செயல்படுத்தவே இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த ஆணையம், ஒலி, லேகாக்குடன் அப்போதைய காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்திர குபேர் காபுங்கையும் கைது செய்ய பரிந்துரைத்திருக்கிறது.
10 ஆண்டுகள் சிறை
நேபாள தேசிய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 181, 182-ன் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சர்மா ஒலி உள்ளிட்டோருக்கு, அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். அப்போதைய உள்துறைச் செயலாளர் கோகர்ண மணி தவாடி, காவல்துறைத் தலைவர் ராஜு ஆர்யால், முன்னாள் தேசிய புலனாய்வுத் துறைத் தலைவர் ஹுடாராஜ் தாபா உள்ளிட்ட பல அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் கூறியுள்ளது.
கைது ஏன்?
கடந்த ஆண்டு நடந்த, இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது. இத குறித்து உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்திருந்தது. இருப்பினும் அதன்படி செயல்படாததால் ஏற்பட்ட குற்றத்திற்கு பொறுப்பற்ற தன்மையே காரணம் என ஆணையம் தெரிவித்தது. இப்போராட்டங்களின் போது 77 பேர் கொல்லப்பட்டனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் அழிக்கப்பட்டன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications