நடு ரோட்டில் துப்பாக்கி சூடு.. சிகிச்சை பலனின்றி ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பலி
டோக்கியோ: இன்று காலை ஜப்பானில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பலியானார். துப்பாக்கி சூட்டில் இவர் பலியாகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ஷின்சோ அபேவை சுட்டதாக கருதப்படும் 41 வயது நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்,
Recommended Video
ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் ஷின்சோ அபே இன்று துப்பாக்கியால் சுடப்பட்டார். அபே இன்று நாரா என்ற மேற்கு ஜப்பான் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகே மக்கள் முன் உரையாடிக்கொண்டு இருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக பேசிக்கொண்டு இருந்தவர் மீது யமகாமி என்ற 41 வயது நபர் துப்பாக்கியால் சுட்டார். பின்னால் இருந்து 2 முறை ஷின்சோ அபேவை அந்த நபர் சுட்டுள்ளார்.
.

சத்தம்
முதலில் அங்கு துப்பாக்கி சூடு சத்தம் மட்டுமே கேட்டுள்ளது. சத்தத்தை தொடர்ந்து.. அடுத்த நொடி உடல் முழுக்க ரத்தத்தோடு அபே சுருண்டு விழுந்துள்ளார். அதன்பின்தான் ஷின்சோ அபேவின் பாதுகாவலர்களுக்கு அவர் சுடப்பட்டதே தெரிய வைத்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட ஷின் சோ அபே ரத்தம் வெளியேறி, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரின் நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் இரண்டு முறை சுடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு
இதையடுத்து ஷின் சோ அபே உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு நெஞ்சு வழியாக குண்டு பாய்ந்த காரணத்தால், மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு உடலில் உடனே நாடிதுடிப்பும் நின்றுள்ளது. ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் யமகாமி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இந்த துப்பாக்கி சூட்டிக்கான் காரணம் தெரியவில்லை.

ஏன்?
இந்த நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஷின்சோ அபே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவருக்கு கடந்த 6 மணி நேரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை. இரண்டு குண்டுகள் அவர் நெஞ்சு வழியாக சென்ற நிலையில், அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருக்கு 67 வயது ஆவது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

ஜப்பான்
ஜப்பானில் பிரதமராக இருந்தவர்களில் அபே மிக முக்கியமான தலைவர். அதிக மக்கள் ஆதரவு கொண்ட லிபரல் கட்சி தலைவர் இவர். ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்ஷோ அபே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக 2020ல் அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை இவர் பிரதமர் பதவியை அலங்கரித்து வந்தார். மொத்தமாக ஜப்பானின் பிரதமராக இவர் 4 முறை இருந்துள்ளார்

உடல்நிலை
கடந்த 2020ம் ஆண்டு திடீரென எனக்கு உடல்நிலை சரியில்லை. இனிமேலும் அரசு ரீதியான பணிகளை கவனிக்க முடியாது. அதனால் நான் பதவி விலகுகிறேன் என்று ஷின்ஷோ அபே அறிவித்தார். இதற்கு முன் ஏற்கனவே 2006ல் இவர் தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 2005ல் பிரதமராக பதவி ஏற்றார். அதன்பின் சரியாக ஒரே வருடத்தில் அந்த பதவியில் இருந்து ராஜினமா செய்தார். இவர் மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் தற்போது துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications