ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற 4 இந்தியர்கள் சிரியாவில் கைது !
டெல்லி: ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற இந்தியைவைச் சேர்ந்த 4 பேரை சிரிய போலீசார் கைது செய்துள்ளனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக வெடித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே சமூக வலைதளங்கள் மூலம் ஐ.எஸ் அமைப்பினர் அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களது இயக்கத்தில் சேர வற்புறுத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஐ.எஸ்.இயக்கத்தில் சேர முயன்றபோது போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரத திட்டமிட்ட 4 இந்தியர்களை சிரியா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிரியாவின் துணை பிரதமர் வலித் அல் மவுலம், ஜோர்டானிலிருந்து சிரியாவுக்குள் நுழைந்து ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர திட்டமிட்ட 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிரிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் குறித்த விவரங்களையும் இந்திய அதிகாரிகளிடம் அவர் கேட்டுள்ளார். விரைவில் அவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications