இளைஞரின் ஆசைக்கு இணங்குவது போல் நடித்து.. நாக்கை கடித்து துண்டாக்கிய இளம் பெண் !
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் ஆசைக்கு இணங்குவது போல் நடித்த இளம்பெண் ஒருவர் அவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரான்சில் உள்ள துலூஸ் நகரின் புர்பான் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவர் புதன்கிழமை வெளியே சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த 24 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் லிப்டில் செல்லும் போது அவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து தனது முழு பலத்தையும் காட்டி அந்த இளைஞரிடம் திருந்து தப்ப முயன்றுள்ளார் அந்த பெண். ஆனால் இளைஞரின் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. பின்னர் இனி தனது பலத்தால் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது என நினைத்து அவனது விருப்பத்திற்கு இணங்குவது போல் நாடகமாடியுள்ளார் அந்த பெண்.
இதனால் உற்சாகமடைந்த இளைஞர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன் முத்தம் கொடுத்துள்ளார். இது தான் தப்பிக்க சரியான தருணம் என தீர்மானித்த பெண், தனது பலம் முழுவதையும் திரட்டி இளைஞரின் நாக்கை பற்களால் பலமாக கடித்து இரண்டாக துண்டாக்கியுள்ளார். வலியால் துடித்த இளைஞர் லிப்ட் நின்றதும் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்
இந்த சம்பவம் குறித்து புகார் பெற்று போலீசார் லிப்ட்டில் சோதனை செய்தபோது, அங்கு இளைஞரின் துண்டிக்கப்பட்ட பாதி நாக்கு இருந்ததை கண்டு அதனை எடுத்து மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பாதி நாக்குடன் தப்பிய நபரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது போலீசார் கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications