"கையை கொடுங்க.." ஜி20 மாநாட்டில் ஜி ஜின்பிங்கை சந்தித்த பைடன்! தைவான் பஞ்சாயத்திற்கு நடுவே மீட்டிங்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இப்போது ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில், அங்கு மிக முக்கியமான ஒரு மீட்டிங் நடந்துள்ளது.
உலகில் டாப் 20 பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளே ஜி20 நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டுத் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து முக்கிய பிரச்சினைகளை குறித்துப் பேசுவார்கள்.
இந்தாண்டு இந்த ஜி20 உச்சி மாநாடு இந்தோனேசியாவில் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தோனேசியா முகாமிட்டு வருகின்றனர்.

ஜி20 மாநாடு
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் இந்தோனேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச பொருளாதாரம் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், இப்போது இந்த ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திப்பு
இந்நிலையில், அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார். ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்று சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், சீன அதிபரை அவர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாக மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கையை கொடுங்க
இந்தோனேசியாவில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட் ஹோட்டலில் இரு தலைவர்களும் ஒருவரையொருவர் கைகுலுக்கி வரவேற்றனர். இந்த மீட்டிங்கை முக்கியமான இடமாகப் பயன்படுத்தி உலக நாடுகளுடன் ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்தவும் அணுசக்தி சக்திகளுக்கு இடையே தவறான புரிதல்களைத் தவிர்க்கவும் இந்த ஜி20 மாநாட்டைப் பயன்படுத்த பைடன் திட்டமிடுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

உற்சாகம்
இரு தலைவர்கள் மிகவும் உற்சாகத்துடனேயே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். அமெரிக்காவில் நடந்த மிட் டேர்ம் தேர்தலில் அதிருப்தி அலைகளைத் தாண்டி பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்ட உற்சாகத்தில் பைடன் உள்ளார். அதேபோல சீனாவில் வேறு எந்த அதிபரும் செய்யாத வகையில் மூன்றாவது முறையாக அதிபர் பொறுப்பில் அமர்ந்துள்ள உற்சாகத்தில் ஜி ஜின்பிங் உள்ளார்.

பைடன்
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன், "இரு நாடுகளுக்கும் இடையே சில தவறான புரிதல்கள் உள்ளன. அந்த கருத்து வேறுபாடுகளை நாங்கள் ஆலோசிப்போம். இந்த சிவப்பு லைன் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் எது நல்ல பலனைக் கொடுக்கும் என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரியளவில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையே வெள்ளை மாளிகை தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரம், சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்ட விஷங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால், உண்மையில் இரு நாட்டு உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை.

தைவான் விவகாரம்
உய்குர் இன முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங்கில் ஜனநாயக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறைகள், தைவானுக்கு மிரட்டல் என பல்வேறு விவகாரங்களிலும் சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் பைடனும் கண்டித்து வந்து உள்ளனர். குறிப்பாக அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றதற்குச் சீனா கடும் பதிலடி கொடுத்தது. இந்தச் சூழலில் இப்போது இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications