இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணை குழுவிலிருந்து 2 பேர் நீக்கம்!
ஜெனிவா: இலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் 10ஆம் தேதி நியமிக்க உள்ள விசாரணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இரண்டு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு காரணமாகவே இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரிகளான ஜெப்ரி ரொபர்ட்சன், டெனிஸ் ஹெலிடே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் புலம்பெயர் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என தெரியவந்ததை அடுத்தே இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாரணைக் குழுவின் தலைவராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் உயிரிழந்த புலிகளின் தலைவர் ஒருவருக்காக இரங்கல் செய்தியை வெளியிட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
கோபி அனான் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யனின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 26வது மனித உரிமை கூட்டத் தொடர் வரும் 10 ஆம் தேதி தொடங்குவதுடன் இலங்கை சார்பில் ஜெனிவாவுக்கான நிரந்த பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் அதில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனிடையே போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட உள்ள குழுவிற்கு சாட்சியங்களை வழங்க புலம்பெயர் புலிகள் 21 சாட்சியாளர்களை தயார்ப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications