உலகின் அமைதியான நாடுகள்.. மோசமான நிலையில் இந்தியா.. சீனா, இலங்கை கூட முன்னாடி இருக்கே
சியாட்டில்: 2025 ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல டாப் இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் இந்தியா எங்கே உள்ளது.. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகள் எந்த இடத்தில் உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐஇபி எனப்படும் பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தாண்டிற்கான அமைதி பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று முக்கிய துறைகளில் 13 விஷயங்களை ஆய்வு செய்து இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரம், ராணுவமயமாக்கலின் அளவு ஆகியவற்றை வைத்து இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தாண்டும் இந்த லிஸ்டில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன. டாப் 10ல் 8 நாடுகள் ஐரோப்பிய நாடுகளாகவே உள்ளன.
1. ஐஸ்லாந்து (1.095)
இதில் முதலிடத்தில் ஐஸ்லாந்து இருக்கிறது. ஐஸ்லாந்து தொடர்ந்து உலகின் மிகவும் அமைதியான நாடு என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.. 2008ம் ஆண்டு முதலே ஐஸ்லாந்து தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்த குற்றங்கள், வரவேற்கும் மக்கள் ஆகியவையே இதன் பிரதான காரணம். மேலும், இங்கு வன்முறை குற்றங்கள் ரொம்பவே அரிது என்கிறார்கள். இதனால் பெரும்பாலும் ஐஸ்லாந்து போலீசார் துப்பாக்கிகளை கையில் வைத்திருக்க மாட்டார்களாம்.
2. அயர்லாந்து (1.260)
அயர்லாந்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் நிலவும் அமைதி, நிலையான அரசியல் சூழல், அமைதியான சர்வதேச உறவுகள் மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் ஆகியவை இதற்குக் காரணமாகும். பயங்கரவாதம் என்பது இங்கு எப்போதும் இருந்ததே இல்லை. உலகில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக அயர்லாந்து இருக்கிறது.
3. நியூசிலாந்து (1.282)
அடுத்து நியூசிலாந்து.. மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் முதன்மையாக இருக்கும் நியூசிலாந்து, உலகின் மூன்றாவது அமைதியான நாடாகும். குற்ற விகிதங்கள், வன்முறைச் சம்பவங்கள் குறைவாக இருப்பது.. வலுவான சமூகப் பாதுகாப்பு முறை இதற்குப் பிரதானக் காரணமாகும்.
4. ஆஸ்திரியா (1.294)
இந்த லிஸ்டில் ஆஸ்திரியா 4வது இடத்தில் இருக்கிறது.. வலுவான பொருளாதாரம், விரிவான சமூக அமைப்புகள், உயர் கல்வி மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் இதற்குப் பிரதானக் காரணம். இதனால் அங்குப் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது.
5. சுவிட்சர்லாந்து (1.294)
பல காலமாக நடுநிலை சூழலில் இருந்த சுவிட்சர்லாந்து, தொடர்ந்து உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு நிலையான ஜனநாயகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு சிறந்து இருப்பதால் தான் சுவிட்சர்லாந்து தொடர்ந்து 5வது இடத்தில் இருக்கிறது.
6. சிங்கப்பூர் (புள்ளி: 1.357)
அடுத்த இடத்தில் சிங்கப்பூர் இருக்கிறது. டாப் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் ஆகும். கடுமையான சட்டங்கள், குறைந்த குற்றங்கள், திறமையான உள்கட்டமைப்பு ஆகியவை பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழலைத் தருகிறது. தொடர்ந்து போர்ச்சுக்கல், டென்மார்க், ஸ்லோவேனியா, பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே 7 முதல் 10 இடங்களில் உள்ளன.
இந்தியா எங்கே?
இதில் இந்தியா 115ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டும் 115ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டும் அதே நிலையைத் தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே மோசமான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் இந்த லிஸ்டில் 144ஆவது இடத்தில் இருக்கிறது.
மற்ற அண்டை நாடுகளில் அதிகபட்சமாக பூட்டான் 21வது இடத்தில் இருக்கிறது. அதேபோல நேபாளம் 76வது இடத்தில் இருக்கும் நிலையில், சீனா 98ஆவது இடத்திலும் இலங்கை 97ஆவது இடத்திலும் இருக்கிறது. இந்த நாடுகளுக்குப் பின்னால் தான் இந்தியா 115வது இடத்தில் இருக்கிறது.
-
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள்












Click it and Unblock the Notifications