Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 தொடங்கி ஒரே வாரத்தில்.. பாபா வங்கா கணிப்பு அப்படியே நடக்குதே.. அடுத்தடுத்து 2 ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்..அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளன.

பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் குறித்து பார்க்கும் முன்.. அவர் யார் என்று ஒரு சின்ன இன்ட்ரோ பார்த்து விடலாம். பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. இவர் 1996லேயே இறந்துவிட்டார். பிறகு ஏன் இவரின் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்று கேட்கிறார்களா?

Granny Baba Vanga prediction for 2024 happening one by one all of a sudden

இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். இவருக்கு 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது.

சக்தி: அந்த நொடியில் அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி உள்ளார். கடவுள் தனக்கு கொடுத்த சக்தி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார்.

இதுவரை உலகின் பல முக்கிய நிகழ்வுகளை இவர் துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. உதாரணமாக 9/11ல் அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்கள் இவர் கணித்து உள்ளாராம்.

2024ம் வருடம்: இந்த நிலையில் 2024ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து அட்டாக் செய்யும். இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர், கொலை செய்யப்படுவார். அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியது என்று தெரிவித்துள்ளார் . அதாவது புடின் மரணம் பற்றி கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் பெயரிடப்படாத "பெரிய நாடு" உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும் . அதை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பா முழுவதும் வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நாடாகும் என்றுள்ளார்.

2024 இல் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள உள்ளோம். இதற்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்க வேண்டும். கடன் அளவுகள் உயரும் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர்.

புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் இருக்கும்.. உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய போர் ஒன்று நடக்கும். இதே வருடம் நாம் ஏலியன்களை காண்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு சம்பவம்: அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளன. ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் சுனாமி ஏற்பட்டது. ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வந்தது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் புகுந்தது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து கடல் நீர் அலை அலையாக புகுந்தது.

ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின் சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டது.

அதேபோல் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் இணையத்தை உலுக்கி உள்ளன.,

10 அடி உயரமுள்ள வேற்றுகிரக ஏலியன் ஒன்று மியாமி ஷாப்பிங் மாலில் சுற்றித் திரிந்ததாக புகார்கள் வந்ததால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பேசைட் மார்க்கெட்பிளேஸுக்கு வெளியே ஒரு பெரிய உருவம் உலா வருவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளால் சூழப்பட்ட அந்த மாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழப்பம்: அதேபோல் அந்த மாலுக்கு மேலே ஏலியனின் வாகனங்கள் என்று கூறப்படும் யுஎப்ஓ போன்ற பறக்கும் தட்டுகளின் வெளிச்சங்கள் தென்பட்டதும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

வீடியோ வைரலானவுடன், ஏலியன்கள் தொடர்பான ஊகங்களும் இணையம் முழுக்க பரவின. "மியாமி மாலில் வேற்றுகிரகவாசிகள் நடமாடியதாக பரவும் வதந்திகள் உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இவ்வளவு போலீஸை நான் ஒரே இடத்தில் பார்த்ததில்லை.. அங்கே எதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது" என்று ஒரு X பயனாளி பதிவிட்டுள்ளார்.

சர்ச்சை: அதே சமயம் அங்கே 50 இளைஞர்கள் சேர்ந்து கலவரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கலவரம் குறித்தும் உறுதியான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அங்கே வானத்தில் விளக்குகள் இங்கும் அங்கும் நகரும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+