இந்தியா குளோபல் ஃபோரம் அமைப்பின் பிஸ்னஸ் ரிலேஷன் தலைவராக உதய் கரண் நியமனம்
லண்டன்: சமகால இந்தியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இடையேயான உறவை உருவாக்கும் இந்தியா குளோபல் ஃபோரம் (ஐஜிஎஃப்) அமைப்பு, இப்போது ஏற்கனவே வலுவாக உள்ள தனது சர்வதேச உறவுகளை மேலும் வலுவாக்கும் வகையில், மூத்த பிபிசி நிர்வாகி ஒருவரை முக்கிய பதவியில் நியமித்துள்ளது.
பிபிசி இந்தியாவில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் உதய் கரண் வர்மா. இவர் பிபிசி இந்தியாவில் இந்தியப் பிரிவுக்கான மேலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் இப்போது இந்தியா குளோபல் ஃபோரத்தில் பிஸ்னஸ் ரிலேஷன் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சர்வதேச அளவில் தேவையான வணிக வாய்ப்புகளை உருவாக்குவதில் நிபுணத்துவத்தைக் கொண்டவர் என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் தனது இருப்பை வலுப்படுத்தத் தொடர்ச்சியாகப் பல முக்கிய நியமனங்களை இந்தியா குளோபல் ஃபோரம் செய்து வரும் நிலையில், அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே உதய் கரணின் நியமனம் பார்க்கப்படுகிறது.
உதய் கரணின் நியமனம் தொடர்பாக இந்திய குளோபல் ஃபோரத்தின் நிறுவனத் தலைவர் மனோஜ் லத்வா கூறுகையில், "ஐஜிஎஃப் அமைப்பிற்கும் சரி ஒரு நாடாக இந்தியாவுக்கும் சரி இது ஒரு முக்கியமான தருணம்.. எங்கள் அமைப்பிற்கு உதய்யை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் பிஸ்னஸ் உறவுகளை வளர்ப்பதில் மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர். அவரது அனுபவம் எங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும் என்று நம்புகிறேன்" என்றார்.
உதய் கரண் வர்மா பிபிசி, நெட்வொர்க் 18 மற்றும் இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எனப் பல நிறுவனங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்த அனுபவம் கொண்டவர்.. பிபிசி நிறுவனத்தில் பிபிசி ஸ்டோரிவொர்க்ஸை தொடங்குவதில் இவரது பங்கு முக்கியமானது. பிபிசி கோல்ஃப் கனெக்ட் மற்றும் பிபிசி ஸ்போர்ட்ஸ்வுமன் ஆஃப் தி இயர் போன்ற வெற்றிகரமான முயற்சிகளுக்கும் காரணம் இவரே தான். இவரது தலைமையில் வருவாய், கன்டெண்ட் புதிய தரத்தை அடைந்தது..
தனது நியமனம் குறித்து உதய் கூறுகையில், "இந்தியாவின் ஸ்டோரியை சர்வதேச அரங்கில் அற்புதமாக வெளிப்படுத்தும் தளமாக இந்த இந்தியா குளோபல் ஃபோரம் இருக்கிறது. இதில் சேருவதில் எனக்குச் சந்தோஷம். ஃபோரத்தின் நோக்கம் எனது பணிகளுடன் ஒத்துப் போகிறது. இந்த டைனமிக் குழுவின் உறுப்பினராக இருப்பதில் மகிழ்ச்சி. சர்வதேச அளவில் பல உலகளாவிய உரையாடல்கள், சந்தைகள் மற்றும் தொழில்களில் புதுமை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
இந்தியா குளோபல் ஃபோரம் என்பது சமகால இந்தியாவின் ஸ்டோரியை சர்வதேச அரங்கில் சொல்லும் ஒரு அமைப்பாகும். இந்தியாவில் நடந்து வரும் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியின் வேகம் உலக நாடுகளுக்கு மிகச் சிறந்த வாய்ப்பை தருகிறது. சர்வதேச நிறுவனங்களின் இந்தியாவுக்கான நுழைவாயிலாக இந்தியா குளோபல் ஃபோரம் இருக்கிறது.
இந்த நிறுவனம் எடுக்கும் முயற்சிகள் இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பைச் சர்வதேச நாடுகளுடன் இணைக்கின்றன. நிலையான எதிர்காலம், வணிகம் மற்றும் பன்முகத்தன்மை மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க இந்த அமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications