பாரீஸில் சவுதி இளவரசர் கார் மீது தாக்குதல்- துப்பாக்கி முனையில் 2.50 லட்சம் ஈரோ கொள்ளை!
பாரிஸ்: பாரிஸில் சவுதி இளவரசரின் காரின் மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் 2.50 லட்சம் மதிப்புள்ள ஈரோ பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கொள்ளையர்கள் மேலும் சில முக்கியமான கோப்புகளையும் திருடிச் சென்றுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.
வடக்கு பாரிஸில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தின் போது, சவுதி இளவரசர், அங்குள்ள சவுதி தூதரகத்தில் இருந்து லீ பர்கெட்டில் உள்ள தூதரகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது காரினை வழிமறித்து தாக்கிய கொள்ளையர்கள், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்றும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். பாரிஸின் போர்டி டி லா சப்லே அருகே இச்சம்பவம் நேற்று நடைபெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச்சம்பவத்திற்கு பயன்பட்ட வாகனம் திருட்டு வாகனம் ஆகும். கொள்ளைக்கு பின் அவ்வாகனமானது கொள்ளையர்களால் எரிக்கப்பட்டும் விட்டது. அக்கொள்ளையர்கள் பற்றிய விவரமானது இதுவரை தெரியவில்லை.
"இது ஒரு முரண்பாடான கொள்ளைச் சம்பவம். அவர்களுக்கு முன்னரே எல்லா தகவல்களும் தெரிந்துள்ளது" என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications