“மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார்!” ஹார்வர்ட் பல்கலை குற்றச்சாட்டு
வாஷிங்டன்: யூத விரோத செயல்பாடுகள் கொண்டதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கிறது என்று டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்நிலையில், "மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் டிரம்ப் தரப்பு உறுதியாக இருக்கிறது" என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
சொந்த நாட்டின் பல்கலைக்கழகமே அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு எதிராக குற்றம்சாட்டியிருப்பது சர்வதேச அளவில் விவாதமாகியிருக்கிறது.

அமெரிக்கா இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அமெரிக்காவின் கல்வி நிலையங்கள் அப்படி அல்ல. குறிப்பாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஜனநாயகத்தின் பக்கம் நிற்கும் என்பது வரலாற்று உண்மை. அந்த வகையில் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை எதிர்த்து ஹாவர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உள்ள நாடுகளை அமெரிக்கா விமர்சித்து வரும் நிலையில், சொந்த நாட்டு மாணவர்களே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்ட களத்தில் இறங்கியது டிரம்ப்புக்கு கவுரவ பிரச்சனையாக பார்க்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை 'களை' எடுக்கும் பணியை டிரம்ப் நிர்வாகம் தொடங்கியிருக்கிறது. ஹார்வர்ட்டில் பிஹெச்.டி. மாணவியான ருமேய்ஸா ஒஸ்துர்க், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதற்காக அவரது மாணவர் விசா ரத்து செய்ப்பட்டிருக்கிறது. கட்டுரை எழுதியதற்கே இப்படி எனில், போராட்டம் நடத்தினால் சும்மா இருக்குமா?
எனவே பல்கலைக்கழகத்திற்கு எதிராக நிர்வாக நடவடிக்கையில் டிரம்ப் தரப்பு தீவிரமாக இறங்கியது. அதாவது பல்கலைக்கான சுமார் $2.3 பில்லியன் நிதியை நிறுத்தி வைத்தது. மட்டுமல்லாது பல்கலைக்கு வருமான வரி விலக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்தது. அதனை டிரம்ப் தரப்பு ரத்து செய்தது. பல்கலைக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. இந்த சொத்துக்களுக்கு வருமான வரியை கட்ட வேண்டியதில்லை. ஏனெனில் இவை கல்வி நிலைய சொத்துக்களாகும். இருப்பினும் இந்த சலுகையை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்திருக்கிறது.
மட்டுமல்லாது பல்கலையில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் தரப்பு 2 கடிதங்களை அனப்பியிருந்தது. முதல் கடிதம் ஏப்.3ம் தேதி பல்கலைக்கு வந்தது. அதில், மாணவர்கள் மாஸ்க் அணியக் கூடாது, பண்முகத்தன்மை, சமஉரிமை ஆகியவை பற்றிய பாடங்களை நீக்க வேண்டும். போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
2வது கடிதம் ஏப்ரல் 11ம் தேதி வந்தது. இதில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் போராட்டங்களுக்கு சப்போர்ட் செய்ய கூடாது. பல்கலைக்கழக சட்டங்களை மீறும் வெளிநாட்டு மாணவர்கள் பற்றி அரசிடம் புகார் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இதன் பாடதிட்டங்களை மாற்றியமைப்பது, கல்வி நிலைய வளாகத்திற்குள் என்ன நடக்க வேண்டும்? எது நடக்கக்கூடாது என்பதை தீர்மானிப்பது வெளியில் இருக்கும் ஆட்களால் முடியாது. எனவே இந்த கோரிக்கைகளை பல்கலை நிராகரித்தது. மட்டுமல்லாது பல்கலைக்கு ஆதரவாக சர்வதேச அளவில குரல்கள் எழுந்தன. எதிர்ப்பு பலமாக இருக்கவே, இந்த கடிதம் அதிகாரப்பூர்வமானது கிடையாது. சில அதிகாரிகள் தன்னிச்சையாக இதை அனுப்பியுள்ளனர் என டிரம்ப் தரப்பு ஜாகா வாங்கியது.
இந்நிலையில், "டிரம்ப் தரப்பு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது" என பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியிருக்கது. இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் கடிதம், பல்கலைக்கழகத்தின் எதிர்வினை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!
-
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
7 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா.. ஈரான் உடனான சண்டையில் மொத்தமா போச்சு! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் கண்ணில் மண்ணை தூவிய அமெரிக்கா.. டீப் பகுதிக்குள் சென்று வீரரை மீட்டது எப்படி? ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம் -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா -
விடிய விடிய தேடுதல்.. ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தின் பைலைட் மீட்பு! அமெரிக்கா நிம்மதி -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
கதவை தட்டும் ரெசிஷன்.. கச்சா எண்ணெய் 150 டாலர் தொடும்.. பயமுறுத்தும் கணிப்புகள் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications