படுத்த படுக்கையாக இருக்கும் பாக்தாதி: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி
பாக்தாத்: அபூபக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்துள்ளதால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தலைவர் பதவிக்காக மோதல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார். அவரது முதுகெலும்பில் அடிபட்டுள்ளதுடன், அவரது இடது கால் பயன்படாமல் போயுள்ளது.
இதையடுத்து பாக்தாதியை பாதுகாப்பு காரணங்களுக்காக ஈராக்கின் மொசுல் நகரில் இருந்து சிரியாவின் ராக்கா நகருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இடைக்கால தலைவர்
பாக்தாதியால் உத்தரவுகள் பிறப்பிக்க முடியும் என்ற போதிலும் அவரால் ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியவில்லை. இதனால் இடைக்கால தலைவரை நியமிக்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஷுரா கவுன்சில் முடிவு செய்துள்ளது.

பாக்தாதி
ஷுரா கவுன்சில் தேர்வு செய்யும் இடைக்கால தலைவர் பாக்தாதிக்கு கீழ் பணிபுரிவார். அவர் பாக்தாதியின் கட்டளைப்படி ஈராக் மற்றும் சிரியாவில் நடக்கும் அமைப்பின் செயல்பாடுகளை கண்காணிப்பார்.

தேர்தல்
இடைக்கால தலைவரை தேர்வு செய்யும் தேர்தலில் ஈராக்கைச் சேர்ந்த இருவரும், சிரியாவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியிடுகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 9 மூத்த தலைவர்களை கொண்ட ஷுரா கவுன்சில் இந்த வாரம் இடைக்கால தலைவரை தேர்வு செய்ய உள்ளது.

தலைவர்
ஈராக்கைச் சேர்ந்த முன்னாள் இயற்பியல் ஆசிரியரான அபு அலா அல் அஃப்ரி மற்றும் அபு அலி அல் அன்பாரி, சிரியாவைச் சேர்ந்த ராக்கா நகரின் ஐஎஸ்ஐஎஸ் ஆளுநரான அபு லுக்மான் என்ற அலி மூஸா அல் ஹவிக் ஆகியோர் இடைக்கால தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் அஃப்ரியும், அன்பாரியும் ஈராக்கில் உள்ள அல் கொய்தா அமைப்பில் இருந்து வந்தவர்கள்.

அஃப்ரி
தலைவர் தேர்தலில் அன்பாரி மற்றும் லுக்மானை விட அல் அஃப்ரி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஷுரா கவுன்சிலின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்தாதி மரணம்
மார்ச் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த பாக்தாதி இறந்துவிட்டார் என்று ஈரான் ரேடியோ அண்மையில் தெரிவித்தது. பாக்தாதி நியமித்த முன்னாள் இயற்பியல் ஆசிரியரான அபு அலா அல் அஃப்ரி அடுத்த தலைவர் ஆகிறார் என செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications