For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவர்தான் மக்களின் பிரதமர்! இந்தியா முதல் பாகிஸ்தான் வரை இதயங்களை வென்ற நரேந்திர மோடி.. இதான் காரணம்

Google Oneindia Tamil News

பர்மிங்காம்: இங்கிலாந்து காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அழுத இந்திய வீராங்கனை பூஜா கெலாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறியதற்கு இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்தும் பாராட்டு குவிகிறது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 72வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா உள்பட 72 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி இந்தியா பதக்க பட்டியிலில் 5வது இடத்தில் இருந்தது.

 காமன்வெல்த் தொடக்க விழா.. பிவி.சிந்து, மன்ப்ரீத் தலைமையில் அணிவகுத்த இந்திய அணி.. தலைவர்கள் வாழ்த்து காமன்வெல்த் தொடக்க விழா.. பிவி.சிந்து, மன்ப்ரீத் தலைமையில் அணிவகுத்த இந்திய அணி.. தலைவர்கள் வாழ்த்து

அசத்தும் இந்தியா

அசத்தும் இந்தியா

அதாவது 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், வீரர்-வீராங்கனைகள் சார்ந்த மாநில முதல் அமைச்சர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வீரர்களும் உத்வேகமாக செயல்பட்டு நாட்டுக்காக பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

பூஜா கெலாட்டுக்கு வெண்கலம்

பூஜா கெலாட்டுக்கு வெண்கலம்

இந்நிலையில் நேற்று பெண்களுக்கான 50 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இருப்பினும் நாட்டுக்காக தங்கம் வெல்ல முடியாமல் போனதை குறிப்பிட்டு அவர் வருத்தம் தெரிவித்து அழுதார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகின.

பிரதமர் மோடி ஆறுதல்

பிரதமர் மோடி ஆறுதல்

இதனை பார்த்த பிரதமர் மோடி பூஜா கெலாட்டுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பூஜா, உங்கள் பதக்கம் கொண்டாட்டத்துக்கு உரியது. நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை. உங்கள் பயணம் எங்களை ஊக்குவிக்கிறது. உங்கள் வெற்றி எங்களை மகிழ்விக்கிறது. நீங்கள் எதிர்காலத்தை பெரிய சாதனை செய்யலாம்'' என அவரை ஊக்கப்படுத்தும் வகையில் குறிப்பிட்டு இருந்தார்.

மோடிக்கு குவியும் பாராட்டு

மோடிக்கு குவியும் பாராட்டு

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை பலர் பாராட்டி வருகின்றனர். மக்கள் பிரதமர் என அவரை புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தான் நாட்டின் பத்திரிகையாளர் சிராஜ் ஹாசன் பிரதமர் நரேந்திர மோடியை சுட்டிக்காட்டி அந்நாட்டு பிரதமரை விமர்சனம் செய்துள்ளார். அதோடு நரேந்திர மோடியை அவர் புகழ்ந்துள்ளார்.

இந்தியாவை பாருங்க...

இந்தியாவை பாருங்க...

இதுதொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் சிராஜ் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்தியா தங்களது விளையாட்டு வீரர்களை நன்றாக முன்னிலைப்படுத்துகிறது. பூஜா கெலாட் வெண்கலம் வென்று தங்கப் பதக்கம் வெல்ல முடியாததால் வருத்தம் தெரிவித்ததற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் அல்லது ஜனாதிபதி இதுபோன்று செய்து இருப்பதை பார்த்து இருக்கிறீர்களா?. பாகிஸ்தான் வீராங்கனைகள் பதக்கம் வென்றார்களா என்பது அவர்களுக்கு தெரியுமா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi's consolation to Pooja Gehlot, who wept after winning a bronze medal at the Commonwealth Games in England, has drawn praise not only from India but also from Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X