முக்காபுலா பிரபுதேவா மாதிரி.. தலை இல்லாமல் ஊர் சுற்றிய உருவம்.. ஷாக் தந்த கூகுள்மேப்!
கூகுள்மேப்பில் பதிவான தலையில்லாத உருவத்தின் படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நியூயார்க்: தலையில்லாமல் வெள்ளை நிற உடையில் சாலையில் ஒரு வினோத உருவம் நடந்து செல்வது போல் கூகுள் மேப்பில் பதிவாகியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் தெரியாத இடத்திற்கு செல்கிறோம் என்றால், அங்கு உள்ளவர்களிடம் தான் விலாசம் விசாரிப்போம். ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை. கூகுள் மேப் உதவியோடு அடுத்த ஊரில் இருக்கும் இடத்தைக்கூட தெளிவாக தெரிந்து கொள்ளும் வசதி வந்து விட்டது.
புதிய இடத்திற்கு செல்வதென்றால் கூகுள் மேப்பிடம் சொல்லி விட்டால் போதும், அது நம் காதுக்குள்ளேயே நுழைந்து, 'ரைட்ல திரும்பு.. லெப்ட்ல போ..' என நாம் செல்ல நினைக்கும் இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். சில சமயங்களில் கூகுள் மேப் பல்பு கொடுப்பதும் உண்டு என்பது தனிக்கதை.

தலையில்லாத உருவம்
உலகில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் கூகுள் 3டி வியூகளை வழங்குகிறது. அதாவது அந்தப் பகுதியில் நாம் உண்மையிலேயே நடந்து செல்லும் போது எப்படி உணருவோமோ அப்படியான அனுபவத்தை தரும் வியூகளை நமக்கு வழங்குகிறது. இப்படியாக சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கூகுள் மேப்பில், சாலையொன்றில் தலையே இல்லாமல் வெறும் ஆடையுடன் ஒரு உருவம் நடந்து செல்வது போல புகைப்படம் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்வம்
நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் நேவி என்ற பகுதியில், அந்நாட்டின் கப்பல் படைக்கு சொந்தமான இடத்தில் இந்த உருவம் பதிவாகியுள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த கடந்தாண்டு மே மாதத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதில் இருந்து, நெட்டிசன்கள் ஆர்வத்துடன் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

வைரல்
பலத்த பாதுகாப்பு மிகுந்த அப்பகுதியில் இப்படி ஒரு காட்சி பதிவாகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலம் என்பதால் யாருமற்ற சாலையில் தனியாக அந்த உருவத்தின் புகைப்படம் மட்டும் பல்வேறு கோணங்களில் பதிவாகியுள்ளது. நடந்து செல்வது, நடனம் ஆடுவது என இதில் பல புகைப்படங்கள் உள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

கம்யூட்டர் கிராபிக்ஸ்?
ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படி பதிவாகியுள்ளதா அல்லது கம்யூட்டர் கிராபிக்ஸ் உதவியால் குறும்பர்களின் கை வரிசையா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால் காதலன் படத்தில் வரும் முக்காபுலா பாடலின் இறுதியில் பிரபுதேவா இருப்பாரே அதனை ஞாபகப் படுத்துகிறது இந்த உருவம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications