For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

By Siva
Google Oneindia Tamil News

ரியாத்: ரியாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு கன மழை பெய்தது.

சவூதி அரேபியா தலைநகர் ரியாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ள நீர் ஓடியது. மேலும் கன மழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

கன மழையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மன்னர் சௌத் பல்கலைக்கழகம், இமாம் முகமது பின் சௌத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்பட 4 பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மழை வெள்ளத்தால் சாலைகளில் கார்கள் பல்வேறு இடங்களில் சிக்கிக் கொண்டதாக ரவ்தா மாவட்டத்தைச் சேர்ந்த கம்ரன் கான் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் நாளை மாலை அமீரகத்தில் கன மழை பெய்யும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக மலைப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Heavy rains lash Riyadh

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமீரகத்தின் வடக்கு பகுதிகள் கன மழையால் பாதிக்கப்பட்டன. ஷார்ஜா, அஜ்மான், ராஸல்கைமா மற்றும் புஜைராவில் உள்ள பல தெருக்கள் வெள்ளக்காடாகின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

English summary
Heavy rains lash Riyadh on saturday night. Heavy rains are expected in most of the cities in UAE on wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X