நார்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
பெர்ஜன்: நார்வே நாட்டில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நார்வே நாட்டின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து இன்று பெர்ஜன் நகருக்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் 11 ஊழியர்கள் உள்பட 13 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விழுந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிரிழப்புகள் பற்றி உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications