லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லா இயக்கத்தின் ஏவுகணைத் தாக்குதலுக்கு 2 இஸ்ரேல் வீரர்கள் பலி!
பெய்ரூட்: இஸ்ரேல்- லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 2 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவின் கோலன் கெய்ட்ஸ் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இதே பகுதியில் சில இடங்கள் ஹெபுல்லா தீவிரவாத இயக்கத்தினர் வசம் உள்ளது.
இந்த கோலன் கெய்ட்ஸ் பகுதியானது இஸ்ரேல், லெபனானுடன் எல்லைகளைக் கொண்டது. கோலன் கெய்ட்ஸ் பகுதியில் ஹெஸ்புல்லா இயக்க தீவிரவாதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வான்படை அதிரடியாக நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது.

இதில் ஹெஸ்புல்லா இயக்க தளபதிகள் 7 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் லெபனான் -சிரியா எல்லையில் இஸ்ரேல் ஆக்கிரமித்து இருக்கும் ஷெபா பகுதியில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டு ராணுவ வாகனங்கள் மீது ஹெஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணைகளைக் கொண்டு நேற்று தாக்குதல் நடத்தினர்.
இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகினர். 7 வீரர்கள் படுகாயமடைந்தனர். ஹெஸ்புல்லா போராளிகளின் இந்த தாக்குதலுக்கு மூர்க்கத்தனமாக பதிலடி தரப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.
மேலும் ஹெஸ்புல்லா இயக்கத்தினரின் முகாம்களின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஆவேச தாக்குதல் நடத்தின. இதில் ஏற்பட்ட உயிரிழப்பு விவரங்கள் தெரியவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications