For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு கூடை சன் லைட்.. ஒரு கூடை மூன்லைட்.. 10 லட்சம் லைட்.. சிகாகோ கோலாகலம்.. வீடியோ

Google Oneindia Tamil News

சிகாகோ: உலகின் பிரபல நிறுவனமான பிளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அந்த வால்ட் டிஸ்னியின் உலகப் புகழ் பெற்ற மிக்கி அண்ட் மின்னி இந்த வார இறுதியில் ஒரு கோலாகல திருவிழாவை சிறப்பிக்க சிகாகோ நகருக்கு விசிட் அடிச்சிருக்காங்க. அது என்னன்னு தெரிஞ்சுக்க வாங்க பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஹாலிடே சீசன் ஆரம்பிக்க போகிறது. மேலை நாடுகளில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிற தேங்க்ஸ் கிவ்விங் டே என்று சொல்லப்படுகிற நன்றி திருவிழா நவம்பர் 22ம் தேதி வியாழன் அன்று கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை தான் பிளாக் ஃப்ரைடே. அன்று எல்லோருக்கும் விடுமுறை. அதனால அங்கு ஹாலிடே சீசன் ஆரம்பிச்சாச்சு. ஹாப்பி ஹாலிடேய்ஸ் என்று சொல்லி இந்த விடுமுறையை கொண்டாடுகிறார்கள் அமெரிக்கர்கள்.

Holiday season begins in USA

இந்த விடுமுறை கொண்டாட்டத்தை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதை பெரிய விழாவாக நடத்துகிறார்கள். அது தான் 'மக்னிபிஸ்ண்ட் மைல் லைட் அப் பரைட்' அப்படின்னு ஆங்கிலத்தில் சொல்லப்படுற ஒரு மில்லியன் லைட் திருவிழா. இந்தத் திருவிழா அங்கு கோலாகலாமாக நடக்கிறது.

சிகாகோ நகரின் முக்கிய இடமான டௌன்டவுன்ல மக்னிபிசிஎன்ட் மைல் அப்படி என்று சொல்லப்படுகிற இடத்தில ஒரு மைல் சுற்றளவு உள்ள முக்கிய பகுதியில் டிராபிக் எல்லாம் நிறுத்தி விட்டு அந்த வழியெல்லாம் 1 மில்லியன் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒரு பிரமாண்ட லைட் திருவிழா நடத்தப்பட்டது.

இந்த லைட் அப் பரைட்ல சிறப்பு விருந்தினர் தான் நம்ம வால்ட் டிஸ்னி மிக்கி அண்ட் மின்னி. அவங்க இரண்டு பேரும் புளோரிடாவில் இருந்து இதற்காக ப்ரத்தியேகமாக வரவழைக்கப்பட்டு அவங்க தான் இதை ஜோராக ஆரம்பித்து வைத்திருக்காங்க. அவங்க போகிற வழியெல்லாம் ஒளியேற்றப்படும். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் விளக்குகள் ஏற்றப்படுமாம்.

மிக்கி மின்னி மட்டும் இல்ல சாண்டா கிளாஸ், பிரம்மாண்ட பொம்மைகள், ராட்சத பலூன்கள், வான வேடிக்கை, சாரட் குதிரை வண்டி, சூப்பர் ப்ரைட் என்று களைகட்டிய விழாவை நீங்க மிஸ் பண்ணிட்டீங்களா.. நோ பிராப்ளம்.. இந்த வீடியோவில் கண்டுகளியுங்க.

- Inkpena சஹாயா

English summary
Holiday season has just begun in USA and people have celebrated the festival with usual fervour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X