கதறும் ஹாங்காங்..குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 36 பேர் உயிரிழப்பு..279 மாயமானதால் பெரும் பதற்றம்
ஹாங்காங்: ஹாங்காங் தாய் போ குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 36 பேர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் தீ விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
ஹாங்காங் அருகே தாய் போ பகுதியிலுள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில் பல குடும்பங்களின் வாழ்க்கையே சிதறடித்த இந்த விபத்து, சமீப ஆண்டுகளில் ஹாங்காங் கண்ட மிகப் பெரிய பேரழிவாக மாறியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, தீ விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும், தீயணைப்பு வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 279 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 29 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சம்பவத்துக்குப் பிறகு சாடின் பகுதியில் உள்ள பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் ஜான் லீ இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். தீ விபத்தில் காயம் அடைந்த பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அந்த குடியிருப்பு வளாகத்தின் எட்டு குடியிருப்புகளில், ஏழு குடியிருப்புகளில் கடந்த சில மாதங்களாக பழுது பார்க்கும் பணி நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானப் பணிகளுக்காக கட்டிடங்கள் முழுவதும் மூங்கில் கட்டைகள் மற்றும் பச்சை வலைகள் போர்த்தப்பட்டிருந்தது. இந்த மூங்கிலில் பயன்படுத்தப்பட்ட ஸ்டைரோபோம் என்ற பொருளால் தீ வேகமாக பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் தான், தீ வழக்கத்திற்கு மாறாக மிக வேகமாக பரவியதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். புதன்கிழமை பிற்பகல் 2.51 மணியளவில் தீ விபத்து நடந்த புகார் பெறப்பட்டுள்ளது. சில நிமிடங்களிலேயே கரும்புகை எழுந்தது.
ஆரம்பத்தில் 'நம்பர் 1' அலாரம் என வகைப்படுத்தப்பட்ட தீக்கான எச்சரிக்கை, 3.34 மணிக்கு 'நம்பர் 4'ஆகவும், 6.22 மணிக்கு அதிகபட்சமான 'நம்பர் 5' நிலைக்கு சென்றது. ஹாங்காஙில் தீ விபத்துகள் 1 முதல் 5 வரை வகைப்படுத்தப்படும் நிலையில், 5 என்றால் மிகப் பெரிய தீவிபத்து என்று பொருளாகும். தீ பரவிய மூன்று கட்டிடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நான்கு கட்டிடங்கள் எரிந்துகொண்டே இருந்தன. இதனால் தீயணைப்பு படையினருக்கு பெரும் சவால் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக சுமார் 900 பேர் அருகிலுள்ள சமுதாயக் கூடங்களிலும், தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications