For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய கப்பல்..சிக்கிய இந்தியர்கள்.. அனைவரும் பாதுகாப்பு..ஐ.நா குட் நியூஸ்

Google Oneindia Tamil News

ஜெனீவா: ஏமன் நாட்டில் ரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் சென்றுகொண்டிருந்த போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான RWABEE எனும் சரக்குக்கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர்.

படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு! படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு!

இந்த சரக்கு கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் உள்பட 11 மாலுமிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ஏமன் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. கப்பலையும், அதில் இருந்தவர்களையும் மீட்கும் பணியில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

7 இந்தியர்கள் சிறை பிடிப்பு

7 இந்தியர்கள் சிறை பிடிப்பு

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கப்பலில் இருந்த 7 இந்தியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் எனவும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா கவலை

இந்தியா கவலை

ஐ.நா. தூதருக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி நேற்று ஏமனில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மிகுந்த கவலையை வெளிப்படுத்தினார்.
கப்பலில் சிக்கியுள்ள 7 இந்தியக் குழு உறுப்பினர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். கிளர்ச்சியாளர்கள் விடுவிக்கப்படும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாக சண்டையை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர் கேட்டுக் கொண்டார்.

பாதுகாப்பாக உள்ளனர்

பாதுகாப்பாக உள்ளனர்

முன்னதாக சரக்குக் கப்பலில் இருந்த ஏழு இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை முன்கூட்டியே விடுவிக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கடந்த 11-ம் தேதி தெரிவித்தது.'' கப்பலில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை நிறுவனம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து நாங்கள் புரிந்துகொள்கிறோம்'' என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறி இருந்தார்.

ஐ.நா பணிக்குழு பேசியது

ஐ.நா பணிக்குழு பேசியது

இந்த நிலையில் கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களிடம் ஐ.நா பணிக்குழு பேசியுள்ளது. ''வழக்கமான வாராந்திர ரோந்துப் பகுதியாக, UNMHA இன்று மதியம் As-Salif துறைமுகம் மற்றும் அண்டை பகுதிகளுக்கு விஜயம் செய்தது. சரக்கு கப்பலைத் தொலைவில் இருந்து பார்த்தது மற்றும் அதன் பணியாளர்களுடன் பேசியது'' என்று ஹுதைதா ஒப்பந்தத்தை (UNMHA) ஆதரிக்கும் ஐ.நா மிஷன்(பணிக்குழு) ஒரு ட்வீட்டில் கூறியுள்ளது.

English summary
Houthi rebels capture UAE-owned cargo ship RWABEE in the port of Hodeidah in Yemen. The Houthi rebels have taken 11 sailors hostage, including seven Indians. The UN task force has spoken to those on board, including Indian personnel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X