வெறுங்கையுடன் கடலுக்கு சென்ற மீனவருக்கு கிடைத்த "புதையல்!" ஒரே நாளில் மொத்தமாக மாறிய வாழ்க்கை.. செம
இஸ்லாமாபாத்: கடலுக்குச் சென்ற மீனவர்களின் வாழ்க்கை ஒரே நாளில் மொத்தமாக மாறியிருக்கிறது. வெறும் கையுடன் சென்ற அந்த மீனவர்களுக்குப் புதையல் கிடைத்துள்ளது.
நம் அனைவருக்கும் அதிர்ஷ்டம் மீது தீராத நம்பிக்கை இருக்கும், எதாவது ஒரு சம்பவம் தங்கள் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிடாதா என்றே பலரும் ஏங்குவார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீனவர் ஒருவருக்கு நடந்துள்ளது.

பாகிஸ்தான் மீனவர்கள்: பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட அரிய வகை மீன்களை ஏலம் விட்டு ஒரே இரவில் கோடீஸ்வரரானார். பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள இப்ராஹிம் ஹைடேரி என்ற மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவர் ஹாஜி பலோச். அவர் தனது சகாக்களுடன் இணைந்து அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் வலையில் அரிய வகை மீன் ஒன்று சிக்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்த வகை மீனைத் தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைப்பார்களாம். பொதுவாக இந்த வகை மீன்கள் ஒன்று அல்லது இரண்டு கிடைத்தால் அதுவே பெரிய விஷயம் ஆனால், அவர்களிடம் பல மீன்கள் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளன. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்ற அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அரிய வகை: இதையடுத்து உடனடியாக கராச்சி துறைமுகத்திற்கு வந்த அந்த மீனவர்கள், அந்த அரிய வகை மீன்களை ஏலம்விட்டுள்ளனர். அப்போது அந்த மீன்கள் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 7 கோடிக்கு ஏலம் போனது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்த மீனவர் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
சோவா என்று அழைக்கப்படும் இந்த மீன் விலைமதிப்பற்றதாகவும் அரிதானதாகவும் கருதப்படுகிறது.. இந்த சோவா மீனின் வயிற்றில் குறிப்பிட்ட சில பொருட்கள் இருக்கிறது. அவை உடலில் ஏற்படும் பல வித நோய் பாதிப்புகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. மேலும், அந்த மீனில் ஒரு நூல் போன்ற ஒரு பொருள் கிடைக்கும். அது மருத்துவ அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படும்.
சோவா மீனவர்கள்: பொதுவாக ஒரு சோவா மீன் 20 முதல் 40 கிலோ எடை கொண்டதாகவும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடியதாகவும் இருக்கும். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மீனைப் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சோவா மீன் ஒன்றை ஏலம் விட்டாலே சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும். இந்த மீனவர்கள் வலையில் மொத்தம் 10 மீன்கள் சிக்கிய நிலையில், அவை 7 கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது.
மருத்துவ நலன்களைத் தாண்டி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ரீதியாக சோவா மீன் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இதன் காரணமாகவே அது விலைமதிப்பு மிக்க மீனாக இருக்கிறது. இது தொடர்பாக உள்ளூர் மீனவர்கள் கூறுகையில், "நாங்கள் கராச்சியில் இருந்து சென்று அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம்.. அப்போது தான் இந்த தங்கப் புதையல் எங்களுக்குக் கிடைத்தது. எங்கள் குழுவில் மொத்தம் 7 மீனவர்கள் இருந்தார்கள். ஏழு பேருக்கும் இந்த தொகை பிரித்துத் தரப்படும்" என்றார்.
பொதுவாக இந்த வகை மீன்கள் ஆழ்கடல் பகுதிகளில் தான் வசிக்கும். இதன் காரணமாகவே அவை அரிய மீன்களாகக் கருதப்படுகிறது. இவை இனப்பெருக்க காலத்தில் மட்டுமே மீன்கள் கடற்கரைக்கு அருகில் வரும். அப்படி அருகே வந்த போது தான் பாகிஸ்தான் மீனவர்களிடம் இந்த மீன் சிக்கியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications