132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி
பெய்ஜிங்: சீனாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர விமான விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்களை இந்த விபத்து கடுமையாக குழப்பி உள்ளது. எப்படி என்ன நடந்தது?
Recommended Video
சீனாவில் நேற்று 132 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. 6 வருட பழைய 737-800NG வகை போயிங் விமானம் ஆகும் இது. 2010க்கு பின் சீனாவில் ஏற்பட்ட பயணிகள் விமான விபத்து ஆகும் இது.
சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம்தான் இந்த விபத்தில் சிக்கியது. மொத்தம் 123 பயணிகள், 2 பைலட், 7 விமான ஊழியர்கள் என்று 132 பேருடன் இந்த விமானம் பறந்த விமானம் விபத்தில் சிக்கி உள்ளது.

மரணம்
இந்த விமானத்தில் பயணித்த யாரும் இதுவரை உயிரோடு மீட்கப்படவில்லை. விமானத்தில் பயணித்த எல்லோரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விமானம் குன்மிங் விமான நிலையத்தில் இருந்து தெற்கு பகுதியில் இருக்கும் குகான்சோ பகுதியில் இருக்கும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். கடந்த 18 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு கடுமையான மீட்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை உடல்கள் மீட்கப்படவில்லை.

எப்படி?
இந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளன. விமானம் சரியாக குஹான்சி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.11 மணிக்கு புறப்பட்டு உள்ளது. விமானம் 2.22 மணிக்கு 29,100 அடி உயரத்தில் பறந்த போது 2.15 நிமிடத்தில் 9,075 அடியை எட்டியது. இன்னும் 45 நொடியில் இந்த மேலும் மேலும் சரிந்து 3,225 அடியை எட்டி உள்ளது. அதாவது 3 நிமிடத்தில் 29,100 அடி உயரத்தில் இருந்து 3,225 அடியை எட்டி உள்ளது. விமானம் செங்குத்தாக மலை மீது விழுந்துள்ளது.

சத்தம்
இந்த விமானம் விழுந்த போது போது அந்த பகுதியில் பெரிய சத்தம் கேட்டுள்ளது. அதாவது விமானம் விழுவதற்கு முன்பே அது செங்குத்தாக பூமியை நோக்கி வந்த சமயத்திலேயே பெரிய அளவில் சத்தம் கேட்டதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். வானத்தில் இருந்து இடி இடிப்பது போல, குண்டுகளை வீசுவது போல பலத்த சத்தத்துடன் இந்த விமானம் மலையை நோக்கி பாய்ந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

புகை வரவில்லை
இந்த விமான விபத்தில் நிலவும் சில மர்மங்கள், சந்தேகங்கள் பின்வருமாறு. நேராக சென்ற விமானம், ஒரு நொடியில் அப்படியே சட்டென செங்குத்தாக கீழே விழுந்துள்ளது. பொதுவாக விமானங்கள் கீழே விழுந்தாலும் கிளைட் செய்து விழும். ஆனால் இந்த விமானம், யாரோ வானத்தில் இருந்து விமானத்தை புரட்டியது போல ஒரு நொடியில் சட்டென செங்குத்தாக கீழே இறங்கி உள்ளது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இந்த விபத்தே வித்தியாசமாக நடந்துள்ளது.

விசாரணை
அதேபோல் விமானம் கீழே விழுந்த போது அதில் இருந்து புகையே வரவில்லை. புகையே இல்லாமல் விமானம், சாதாரணமாக அப்படியே விழுந்துள்ளது. அப்படி என்றால் இது எஞ்சின் கோளாறு ஏற்பட்டு இருக்காது என்றே கருதப்படுகிறது. தற்போது இங்கு விமான வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இது தொடர்பாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பிரபல விமான வல்லுனர் ராபர்ட் மன் அளித்துள்ள பேட்டியில், இந்த விமானம் விழுந்ததில் நிறைய சந்தேகம் உள்ளது.

விளக்கம்
Automatic Dependent Surveillance-Broadcast (ADS-B) டேட்டா படி இந்த விமானம் சட்டென கீழே விழுந்துள்ளது. அது எப்படி என்று கண்டுபிடிக்க வேண்டும். காக்பிட்டில் விமானிகள் பேசிக்கொண்ட விஷயங்களை கண்டுபிடிக்க வேண்டும். பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன நடந்தது என்று தெரியும். அதேபோல் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் என்ன நடந்தது என்று கொஞ்சம் தெரிந்துவிடும், இதுவரை எந்த க்ளுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

புதிர்
பொதுவாக 20 ஆயிரத்திற்கும் மேல் உள்ள உயரத்தில் விமானங்கள் பறக்கும் போது அதில் எந்திர கோளாறுகள் ஏற்படாது. அப்படியே ஏற்பாட்டாலும் கிளைட் செய்து சில கிலோ மீட்டர் செல்லலாம். வானிலை அல்லது உள்ளே இருந்து ஒருவர் சதி செய்தால் மட்டுமே விமானம் இப்படி விழ வாய்ப்புள்ளது. அங்கு வானிலையும் மோசமாக இல்லை என்பதால் உண்மையில் விபத்துக்கு என்னதான் காரணமாக இருந்திருக்கும் என்ற புதிர் நிலவி வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications