ரஷ்யா, சீனா, ஐரோப்பா, பாக்.. இந்தியாவை உற்று நோக்கிய உலக நாடுகள்! அமெரிக்க மீட்டிங்கில் மாஸ் முடிவு
டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே நடந்த 2+2 ஆலோசனை கூட்டத்தை பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக உற்று நோக்கி வந்தன. இரண்டு நாட்டு ஆலோசனை கூட்ட முடிவுகள் பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. அப்படி என்ன நடந்தது என்று பார்க்கலாம்?
Recommended Video
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் 2+2 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி இந்த ஆலோசனை கூட்டம்.. பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின் நேற்று நிறைவு பெற்றது.
ரஷ்ய - உக்ரைன் போருக்கு இடையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் பல்வேறு விஷயங்களுக்காக கவனம் பெற்றது. இந்த போரில் இதுவரை ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை.

உலக நாடுகள் எதிர்பார்ப்பு
இதை அமெரிக்கா பல முறை மறைமுகமாக கண்டித்தும் கூட இந்தியா ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்த 2+2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனித உரிமை பிரச்சனைகளை கவனிப்பதாக அமைச்சர் பிளிங்கன் சொன்னது மட்டுமே சர்ச்சையானது. அதற்கு அமைச்சர் ஜெய் சங்கரும்.. நீங்கள் எங்கள் விஷயத்தில் கருத்து தெரிவித்தால், உங்கள் உள்நாட்டு விஷயத்தில் நாங்களும் கருத்து தெரிவிப்போம் என்று பதிலடி கொடுத்தார். இந்தியா அமெரிக்கா இடையே இந்த ஆலோசனை கூட்டத்தை பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக உற்றுநோக்கின.

ரஷ்யா எதிர்பார்ப்பு
ரஷ்யா இந்த மீட்டிங்கை கவனிக்க பல்வேறு காரணம் உள்ளது. ரஷ்யாவை பொறுத்தவரை இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட கூடாது. முக்கியமாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தங்கள் எதையும் போட்டு விட கூடாது. அமெரிக்காவுடன் இந்தியாவிற்கு ஏற்பட்ட லேசான விரிசல் மேலும் விரிவடைய வேண்டும் என்பதே ரஷ்யாவின் உள்ளார்ந்த விருப்பமாக இருந்தது. இந்தியாவுடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் கொடுத்தது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்காய் கூட இதற்காகவே இந்தியா வந்திருந்தார். இதனால் ரஷ்யா இந்த ஆலோசனை கூட்டத்தை தீவிரமாக கவனித்து வந்தது.

சீனா எதிர்பார்ப்பு
இன்னொரு பக்கம் இந்தியா அமெரிக்கா ஆலோசனை கூட்டத்தை சீனாவும் உற்று நோக்கியது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா - இந்தியா நெருக்கமானது. அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு லேசாக பிளவுபட்டது. இதனால் இரண்டு நாட்டு உறவு எப்படி இருக்கும் என்பதை ஆராய இந்த மீட்டிங்கை சீனா உற்று நோக்கியது. ஏனென்றால் அமெரிக்காவுடன் இந்தியா மோதினால் அது குவாட் அமைப்பு பிளவு பட முக்கிய காரணமாக அமையும். அப்படி குவாட் அமைப்பு பிளவுபட்டால் அது சீனாவிற்கு சாதகமாக அமையும். இந்தியா - அமெரிக்கா மோதிக்கொண்டால் அது சீனாவிற்குத்தான் சாதகம் என்பதால் இந்த கூட்டத்தை சீனா தீவிரமாக உற்றுநோக்கியது.

பாகிஸ்தான்
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் பாகிஸ்தான் அரசும் இதை தீவிரமாக கவனித்து வந்தது. ஏனென்றால் பாகிஸ்தானில் ஆட்சி கவிழவே ஒரு விதத்தில் அமெரிக்காதான் காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியா - அமெரிக்கா உறவு எப்படி இருக்கிறது என்பது பாகிஸ்தானுக்கு மிக முக்கியம். சீனாவை போலவேதான் பாகிஸ்தானுக்கும் இந்த மீட்டிங் மிக முக்கியம். அதிலும் அமெரிக்காவிடம் இந்தியா ஆயுத ஒப்பந்தங்கள் செய்தால் அது பாகிஸ்தானுக்கு சிக்கலாகும் என்பதால் இந்த மீட்டிங் பாகிஸ்தானுக்கும் முக்கியமானதாக இருந்தது.

உற்று கவனித்த ஐரோப்பா
அதோடு இந்த ஆலோசனை கூட்டத்தை ஐரோப்பா நாடுகளும் உற்றுநோக்கின. ரஷ்ய உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை. மேற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தாலும் ரஷ்யாவை இந்தியா எதிர்க்கவில்லை. இதனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும். அதன் மூலம் மேற்கு உலக நாடுகளின் வழிக்கு இந்தியா வரும் என்று ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் நம்பி இந்த ஆலோசனை கூட்டத்தை கவனித்தன.

ஏமாற்றம் மிச்சம்
ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவு எல்லா நாடுகளையும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இந்தியா மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டு, எந்த கட்டுப்பாட்டிற்கு அடிபணியாமல் தொடர்ந்து நடுநிலையாக செயல்பட முடிவு செய்துள்ளது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் எதிர்பார்த்தது போல அமெரிக்காவை இந்தியா பகைக்கவும் இல்லை. அதே போல் ஐரோப்பா எதிர்பார்த்தது போல அமெரிக்காவிடம் இந்தியா மொத்தமாக அடிபணிந்து போகவில்லை. இந்தியா தொடர்ந்து இதில் இரண்டு பக்கமும் நட்புடன்தான் செயல்படும் என்பது இந்த மீட்டிங் மூலம் உறுதி ஆகியுள்ளது.

உறுதியாக சொன்ன மோடி
இந்த மீட்டிங்கில் அமெரிக்க அதிபர் பிடனுடன் பேசிய பிரதமர் மோடி மூன்று விஷயங்களை உறுதிப்படுத்தினார். அதில், இந்தியாவின் தனிப்பட்ட உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது என்பதை உறுதிப்படுத்தினார். அதே சமயம் உக்ரைனில் நடந்த புச்சா கொலைகளை இந்தியா கண்டிப்பதாகவும் உறுதிப்படுத்தினார். இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையுடன் இருக்கும் என்பதையும் மோடி பிடனிடம் உறுதிப்படுத்தினார். அமெரிக்கா - இந்தியா ஆலோசனை கூட்டத்தால் இந்தியாவிற்கு அழுத்தம் ஏற்படலாம் என்று உலக நாடுகள் நினைத்த நிலையில்.. இந்தியா தொடர்ந்து நடுநிலையுடன் செயல்படும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications