Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் எடுத்த முடிவால் வளர்ந்த உலக போதை பொருள் தலைவர்.. எல் மென்சோ சாம்ராஜ்ஜியம் உருவானது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மெக்சிகோ சிட்டி: உலக போதைப் பொருள் கும்பல் தலைவரான எல் மென்சோவை அந்நாட்டு ராணுவம் கொன்றுள்ளது. இது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என இரு கண்டங்களிலும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான போரில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இரு கண்டங்களையும் கண்ட்ரோலில் வைத்த எல் மென்சோவின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

சர்வதேச அளவில் மிகப் பெரிய போதைக் கும்பல் தலைவராக இருந்த எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்கா, தென் அமெரிக்க என இரு கண்டங்களில் அவர் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதேநேரம் எல் மென்சோவின் வளர்ச்சி வெறும் வன்முறையால் மட்டும் நிகழவில்லை. அமெரிக்காவின் போதைப் பொருள் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுடன் அது ஆழமாகப் பிணைந்திருந்தது.

How El Mencho Built huge illegal Corridor Colombia to US Raise and fall of CJNG will shock many

அமெரிக்கப் போதைப் பொருள் சந்தை

அமெரிக்காவில் போதைப் பொருள் சந்தையில் செயற்கை ஓபியாய்டுகள் சில காலம் ஆதிக்கம் செலுத்தியது. பிறகு அவை மறைந்து கோகைன் பயன்பாடு மீண்டும் அதிகரித்தது. மேற்கு அமெரிக்காவில் 2019 முதல் கோகைன் பயன்பாடு 154% வரையிலும் அதிகரித்துள்ளதாக 2024ல் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.. மறுபுறம் அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா ஃபென்டானில், ஓபியாய்டு ஒழிப்பிற்கு முன்னுரிமை அளித்தது.

மெக்சிகோவை சினலோவா போன்ற செயற்கை ஓபியாய்டுகளை ஒழிக்க அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. அதாவது அந்த காலக்கட்டத்தில் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அதிபராக இருந்தார். அப்போது டிரம்ப் நிர்வாகம் ஓபியாய்டுகளை ஒழிக்கவே முக்கியத்துவம் கொடுத்தது. இது மறைமுகமாக எல் மென்சோவுக்கு உதவியது.

இதர போதை மருந்துகள்

அதாவது இரு மாற்றங்கள் நடந்துள்ளது. ஒரு பக்கம் அமெரிக்கப் போதைப் பொருள் சந்தையில் இதர போதை மருந்துகள் பயன்பாடு குறைந்து, கோகைன் பயன்பாடு அதிகரித்துள்ளது. மறுபுறம் அமெரிக்க நிர்வாகமும் ஒபியாட்டுகளை அழிக்கவே முன்னுரிமை கொடுத்து வந்தது. இது எல் மென்சோவின் கார்ப்போரேட்டல் டி நியூவா ஜெனரேசியன் ஜாலிஸ்கோ கேங்கிற்கு மிக சிறந்த வாய்ப்பைக் கொடுத்தது.

அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு ஒபியாய்டுகள் பக்கம் திரும்பவே எல் மென்சோ கோகைன் கடத்தலில் தீவிரமாக இறங்கினார். அவர் கொலம்பியாவிலிருந்து ஈக்வடார் வழியாக மெக்சிகோ பசிபிக் கடற்கரைக்கு, ஸ்பீட் போட்கள் மற்றும் செமி நீர்மூழ்கி சிறிய ரக கப்பல்கள் மூலம் டன் கணக்கில் போதை மருந்துகளை கடத்தினார்.

மறுபுறம் எல் மென்சோவின் பிரதானப் போட்டியாளராக சினலோவா கேங்கிலும் பிளவுகள் வெடித்தன. 2017இல் எல் சாப்போவின் கைது மற்றும் நாடு கடத்தல், சினலோவா தலைமையைப் பெரிதும் பாதித்தது. அவருடைய மகன்கள், ஹெராயினை விட மலிவானதும், எளிதில் கடத்தக்கூடியதுமான ஃபென்டானில் உற்பத்திக்கு மாறினர். இதற்கு நடுவே தான் அந்த கேங்கில் பிளவு ஏற்பட்டது. அந்த பிளவு கேங்கை உள்ளே இருந்து காலி செய்தது.

முக்கிய டீல்

இப்படி மாறி வரும் தேவை, அமெரிக்காவின் கவனம், எதிரிகளின் சரிவு எனக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் எல் மென்சோ. இந்தச் சூழலில் தான் கடந்த 2024ல், சாபிடோஸ் கேங் என்ற மற்றொரு கும்பலின் தலைவர் இவான் அர்ச்சிவால்டோ கஸ்மானின் மூத்த லெப்டினன்ட் ஒருவரைச் சந்தித்து முக்கியமான ஒரு டீலை போட்டார். அதன் கீழ் சாபிடோஸ் கேங்கிற்கு பணம் மற்றும் ஆயுதங்களை எல் மென்சோ கேங் கொடுத்தது. அதற்குப் பதிலாக அமெரிக்காவுக்குக் கடத்தும் அனைத்து வழிகளும் எல் மென்சோவுக்கு திறந்துவிட்டது கீழ் சாபிடோஸ்!

அதற்கு முன்பு வரை அமெரிக்காவுக்குக் கடத்துவதில் பல்வேறு சிரமங்களை எல் மென்சோ கும்பல் எதிர்கொண்டு வந்தது. ஆனால், இந்த டீலுக்கு பிறகு எளிதாக அமெரிக்காவுக்குக் கடத்த முடிந்தது. இதன் மூலமே எல் மென்சோ சாம்ராஜ்ஜியம் வளர்ந்தது.

சரிந்தார்

அமெரிக்கா மட்டுமின்றி தென் அமெரிக்க நாடுகளிலும் எல் மென்சோ கேங் ஆதிக்கம் அதிகரித்தது. அமெரிக்காவைக் காட்டிலும் தென் அமெரிக்காவில் ஈஸியாகவே எல் மென்சோ தங்கள் நெட்வொர்க்கை வளர்த்து எடுத்தது. இப்படிக் குறுகிய காலத்தில் யாருமே நெருங்கவே முடியாத அளவுக்கு வளர்ந்தார் எல் மென்சோ! ஆனால், தப்பான வழிகளில் சீக்கிரம் வளர்ந்தால் அதே அளவு சீக்கிரம் வீழ்வோம் என்பதைக் காட்டும் விதமாகவே இப்போது எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+