காதலியால் சிக்கிய எல் மென்சோ! 19 வருடங்கள் எஸ்கேப் ஆன போதை பொருள் தலைவர் மாட்டியது இப்படி தான்!
மெக்சிகோ சிட்டி: உலக அளவில் தேடப்படும் போதைப் பொருள் மன்னரான எல் மென்சோ நேற்றைய தினம் ராணுவத்திடம் சிக்கினார். ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்கா அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதற்கிடையே அவர் ராணுவத்திடம் எப்படிச் சிக்கினார். கடைசி நொடிகளில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
மெக்ஸிகோவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கும்பல் தலைவரான 'எல் மென்சோ' நேற்றைய தினம் உயிரிழந்தார். அவரை பிடிக்க நேரடியாகக் களத்தில் இறங்கிய மெச்கிகோ ராணுவம் அதிரடி ஆபரேஷனை நடத்தியது. அதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும்போதே உயிரிழந்தார்.

எல் மென்சோ சிக்கியது எப்படி
இதற்கிடையே ராணுவத்தினர் அவரது இருப்பிடத்தை எப்படிக் கண்டுபிடித்தனர் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. சுமார் 19 ஆண்டுகளாக போலீசாரால் நெருங்கவே முடியாத இடத்தில் இருந்த எல் மென்சோ எப்படிச் சிக்கினார் என்ற தகவல்களை மெக்ஸிகோவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிக்கார்டோ ட்ரெவில்லா பகிர்ந்துள்ளார்.
அவரது கேர்ள் பிரண்ட் நடமாட்டத்தை வைத்தே இவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். காதலியின் நடமாட்டங்களில் இருந்து திரட்டப்பட்ட உளவுத் தகவல்களே இவருக்கு எமனாக மாறியுள்ளது. அதை வைத்தே ஜாலிஸ்கோ மாகாணத்தின் தபால்பா மலை நகரத்திற்கு எல் மென்சோ துல்லியமாக எங்கே இருக்கிறார் என்பதைப் பாதுகாப்புப் படையினர் அறிந்து கொண்டுள்ளனர்.
கேர்ள் பிரண்ட்
அதாவது எல் மென்சோவின் கேர்ள் பிரண்ட்களில் ஒருவரது நடமாட்டத்தை ராணுவம் கூர்ந்து கவனித்துள்ளது. அவர் கார்டெல் உறுப்பினர்கள் குவிந்து இருக்கும் ஒரு இருப்பிடத்திற்குப் போய் இருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். இதை வைத்தே எல் மென்சோ அங்கு தான் இருக்கிறார் என்பதை ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர். பலத்த பாதுகாப்புடன் எல் மென்சோ உள்ளே இருப்பது கண்டறியப்பட்டது.
கேர்ள் பிரண்ட் வந்து சென்றது முதலே, அந்த இடத்தைக் கூர்ந்து கவனித்து வந்துள்ளனர். மறுநாளே பாதுகாப்புப் படைகள் அந்த வளாகத்தைச் சுற்றி வளைத்தன. எல் மென்சோவின் விசுவாசமான அடியாட்களை ராணுவத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பிறகு எல் மென்சோவை அருகே இருந்து காட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும், ராணுவத்தினர் விடாமல் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.
உயிரிழப்பு
அப்போது தான் படுகாயங்களோடு அவரை ராணுவத்தினர் பிடித்தனர். காயமடைந்த எல் மென்சோ உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டாலும், வழியிலேயே உயிரிழந்தனர். அமெரிக்கா எல் மென்சோ இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்து உதவினாலும் கூட மெக்சிகோ ராணுவமே முழுக்க முழுக்க இந்த ஆபரேஷனை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கப் படைகள் இந்த ஆபரேஷனில் ஈடுபடவில்லை என்பதை மெக்சிகோ அதிபரும் உறுதி செய்துள்ளார்.
மெக்சிகோ அரசு
இந்த ஆபரேஷனை தொடர்ந்து மெக்சிகோ நாடு முழுக்க வன்முறை வெடித்து. போதைப் பொருள் கும்பல்கள் நெடுஞ்சாலைகளை மறிப்பது, வாகனங்களுக்குத் தீ வைத்தல், வணிக நிறுவனங்களைத் தாக்குதல் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 25 தேசியக் காவல் படையினர் கொல்லப்பட்டதாக மெக்சிகோ கூறுகிறது.. மேலும், சுமார் 30 கார்டல் உறுப்பினர்களும் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மெக்சிகோவில் வன்முறை தொடரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த மாகாண அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக மெக்சிகோ அதிபர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பலரும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அதேநேரம் நிலைமை அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே உள்ளதால் இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications