For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த ஒரு விஷயம்தான் மாற்றியது.. இந்தியாவிற்கு எதிராக இம்ரான் கான் எடுத்த முடிவிற்கு இதுதான் காரணம்!

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் நேற்று முக்கிய முடிவுகளை எடுக்க நிறைய காரணங்கள் இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவுக்கு எதிராக 5 முக்கிய முடிவை எடுத்த பாகிஸ்தான்- வீடியோ

    இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் நேற்று முக்கிய முடிவுகளை எடுக்க நிறைய காரணங்கள் இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்த ஆலோசனை கூட்டம் ஒன்றிற்கு பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததை அடுத்து இந்தியாவுடன் பாகிஸ்தான் மொத்தமாக உறவை முறித்துள்ளது. 5 முக்கியமான முடிவுகளை பாகிஸ்தான் தற்போது எடுத்துள்ளது.

    பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. எந்த விதமான அரசு தொடர்பான உறவுகளும் இனி இருக்காது. இரண்டு நாட்டு தூதராக அதிகாரிகளும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    என்ன சண்டை வந்தாலும், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் எந்த விதமான ராணுவ நடவடிக்கையும் எடுக்காது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தானின் பொருளாதார சூழ்நிலைகள் சரியாக இல்லை. அதனால், போர் வந்தால் அங்கு பொருளாதாரம் மேலும் பாதிப்பு அடையும் . இதனால் பாகிஸ்தான் போருக்கு செல்லாது என்கிறார்கள்.

    இம்ரான் கான்

    இம்ரான் கான்

    அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விஷயத்திற்கு பின் அதிக அளவில் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் இம்ரானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. அதேபோல் மக்களும் இம்ரான் செயலில் நம்பிக்கை இல்லாமல் கோபத்தில் இருக்கிறார்கள்.

    என்ன பதிலடி

    என்ன பதிலடி

    இதனால் இம்ரான் கான் நேற்று அவசரமாக முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி, விமானப்படை தளபதி, பாதுகாப்புதுறை அமைச்சர், பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்தான் இம்ரான் கான் இந்தியாவிற்கு எதிரான நேற்றைய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    எப்படி

    எப்படி

    அதில், இந்தியாவிற்கு எதிராக ராணுவ ரீதியான நடவடிக்கைகளை விட ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள்தான் அதிக பலன் அளிக்கும். அதன் மூலம் இந்தியாவை பணிய வைக்க முடியும். முக்கியமாக ஐநா, அமெரிக்காவிடம் முறையிடுவதன் மூலமே இதை சரி செய்ய முடியும் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இதற்கு பின்பே இம்ரான் கான் இந்தியாவுடன் உறவை முறிப்பதாக அறிவித்தார்.

    English summary
    How pakistan took decision against India yesterday?- The back story.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X