10,000 பெண்கள் குளியல் படங்கள்.. 30 ஆண்டுகளாக சீக்ரெட்டாக எடுத்த கும்பல்! பலே கேங் சிக்கியது எப்படி

ஜப்பானில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக படமெடுத்த கும்பல் போலீசில் சிக்கியது.

Subscribe to Oneindia Tamil

டோக்கியா: ஜப்பான் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ஹாட் ஸ்பிரிங் எனப்படும் வெந்நீரூற்றுகளில் குளிக்கும் பெண்களை ரகசியமாக மறைந்து படமெடுத்த கும்பல் குறித்த தகவல் வெளியாகி அதிர வைத்துள்ளது.

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான், சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 12.5 கோடி மக்களைக் கொண்ட ஜப்பானுக்கு, பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் செல்வார்கள்.

இதற்கிடையே அங்கு ஹாட் ஸ்பிரிங் எனப்படும் வெந்நீரூற்றுகளில் நடந்த மோசமான குற்றச் சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இதனால் ஜப்பான் பெண்களே அதிர்ச்சியில் உள்ளனர்.

 ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எந்தளவுக்குப் புகழ் பெற்றவையோ.. அதே அளவுக்கு அங்கிருக்கும் புராதன பொருட்களும் புகழ் பெற்றவை. இதைக்காண ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இதற்காக ஜப்பான் செல்கின்றனர். அங்கு இருக்கும் ஹாட் ஸ்பிரிங் எனப்படும் வெந்நீரூற்றுகளும் ரொம்பவே பிரபலம். இயற்கையாகவே சூடான நீரைக் கொண்டிருக்கும் ஊற்று தான் ஹாட் ஸ்பிரிங் என்று அழைக்கப்படும். நிலத்தடியே இருக்கும் எரிமலை செயல்பாட்டால் இந்த வெந்நீரூற்றுகள் உருவாகிறது.

 ஹாட் ஸ்பிரிங்

ஹாட் ஸ்பிரிங்

ஜப்பான் மக்களும் தவறாமல் ஹாட் ஸ்பிரிங் எனப்படும் வெந்நீரூற்றுகளுக்குச் செல்வார்கள். இதனிடையே இங்குக் குளிக்க வரும் பெண்களைச் சிலர் மறைந்திருந்து படம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஏதோ இப்போது மட்டும் இந்தச் சம்பவம் நடக்கவில்லை.. சுமார் 30 ஆண்டுகளாகவே யாருடைய கண்களிலும் சிக்காமல் இப்படி பெண்கள் வெந்நீரூற்றுகளில் குளிப்பதை இவர்கள் மறைந்திருந்து படம் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜப்பான் நாட்டையே அதிர வைத்துள்ளது.

 10 ஆயிரம் பெண்கள்

10 ஆயிரம் பெண்கள்

மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குளிப்பதை இவர்கள் இப்படி ரகசியமாகப் படம் பிடித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மாஸ்டர் மைண்டாக இருந்த கரின் சைட்டோ என்பவரை போலீசார் கடந்த 2021 டிசம்பரில் கைது செய்தனர். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே போலீசார் இப்போது மற்ற குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். இந்த கேங் தான் ஒன்றாக இணைந்து வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை ரகசியமாகப் படம் பிடித்துள்ளது.

 மாஸ்டர் மைண்ட்

மாஸ்டர் மைண்ட்

பெண்கள் குளிப்பதை இவர்கள் ரகசியமாகப் படம் பிடித்து, அதை தங்களுக்குள் பகிர்ந்தும் வந்துள்ளனர். இப்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் மூத்த நிறுவன நிர்வாகிகள், உள்ளூர் அரசியல் தலைவர்கள், டோக்கியோவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மாஸ்டர் மைண்டாக இருந்த கரின் சைட்டோவுக்கு இப்போது 50 வயதாகிறது. அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் குறித்த தகவல்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 30 ஆண்டுகளாக

30 ஆண்டுகளாக

50 வயதான கரின் சைட்டோ, தனது 20 வயதிலிருந்தே பெண்கள் வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பதை சீக்ரெட்டாக படம் பிடித்து வருகிறார்.. கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகள் சைட்டோவிடமிருந்து தான் பெண்களைப் படம்பிடிக்கும் கீழ்த்தரமான நுட்பங்களைக் கற்றுள்ளனர்.. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் 10,000 பெண்கள் குளிப்பதை இவர்கள் படம் பிடித்துள்ளனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இப்படி படம் பிடித்துள்ளனர்.

 எப்படி

எப்படி

இவர்கள் ஹாட் ஸ்பிரிங் இருக்கும் இடத்தில் இருந்து பல நூறு மீட்டர்களுக்கு அப்பால் மறைந்து கொள்வார்களாம். பெண்கள் அங்குக் குளிக்கும் போது, அதைப் பல நூறு மீட்டர்கள் தொலைவில் இருந்தபடியே படம் பிடிப்பார்களாம். இது மட்டுமின்றி, இந்த வீடியோக்களை படம் போல எடிட் செய்து குற்றவாளிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் கீழ்த்தரமான செயலிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். சைட்டோவும் அவரது குழுவினரும் நீண்ட-ஃபோகஸ் டெலிஃபோட்டோ லென்ஸ்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படம் பிடித்துள்ளனர்.

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

மேலும், யாருடைய போட்டோ மற்றும் வீடியோ சிறப்பாக உள்ளதோ அவர்களுக்கு அதிக வெகுமதியையும் கொடுப்பாராம் கரின் சைட்டோ. இது குறித்து ஜப்பான் ஹாட் ஸ்பிரிங்ஸ் அசோசியேஷன் நிர்வாக இயக்குநர் யுடகா செகி கூறுகையில், "இந்தச் சம்பவம் அதிர்ச்சி தருவதாக உள்ளது. அனைவரும் ஹாட் ஸ்பிரிங்ஸ் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால், அதிநவீன தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் காரியம் அதிர்ச்சி தருகிறது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+