For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூரிப்பில் புதின்.. ரஷ்யாவின் ரூபிள் பண மதிப்பு உயர்கிறது! போருக்கு இடையே மீண்டது எப்படி தெரியுமா?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போரை கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதனால் ரஷ்யாவின் கரன்சி ரூபிள் சரிவை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் அதன் மதிப்பு கூடி வருகிறது. ரஷ்யா தனது ரூபிள் மதிப்பை மீட்டது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் மீது பிப்ரவரி 24ல் ரஷ்யா போர் தொடுக்க துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன.

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 5 நாட்கள் ஜில் மழை - வானிலையின் கூல் அறிவிப்பு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 5 நாட்கள் ஜில் மழை - வானிலையின் கூல் அறிவிப்பு

ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. வெளிநாடுகளில் இயங்கிய ரஷ்ய நிறுவனங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டன. ரஷ்யாவில் இருந்தும் சில நிறுவனங்கள் வெளியேறி உள்ளன. மேலும் கச்சா எண்ணெய், கியாஸ் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ரூபிள் மதிப்பு உயர்வு

ரூபிள் மதிப்பு உயர்வு

உலக பொருளாதாரத்தில் இருந்து ரஷ்யா பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இது 1998 ரஷ்ய நிதி நெருக்கடியின் போது ரஷ்யா சந்தித்த இடர்பாடுகளை நினைவுகூறலாம் என பொருளதார நிபுணர்கள் கூறினர். அதன்படியே ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபிளின் மதிப்பு 121.5 என இருந்தது.

 ரூபிள் மதிப்பு மீட்பு

ரூபிள் மதிப்பு மீட்பு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்பு ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபிளின் மதிப்பு 76 என்ற அளவில் இருந்தது. ரூபிள் மாற்று மதிப்பு வெகுவாக சரிந்ததால் ரஷ்யா பொருளாதாரம் அதிகமாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தற்போதும் போர் நடவடிக்கையை தொடரும் நிலையில் பொருளாதார தடைகள் அமலில் உள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு நேற்று 79.7 என்ற அளவில் இருந்தது.

புதினுக்கு வெற்றி

புதினுக்கு வெற்றி

போர் நடவடிக்கைக்கு ரஷ்யாவில் எதிர்ப்பு இருந்தாலும் கூட விரைவான ரூபிள் மீட்பு விலாடிமிர் புதினுக்கு ரஷ்யாவில் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை அளித்துள்ளது. ரூபிள் மதிப்பு உடனடியாக மீட்பு நிலைக்கு வந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. அமெரிக்கா உள்பட நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகள் விதித்த பொருளாதார தடைகளால் ரஷ்யா எளிதில் மீள முடியாது என நினைக்கப்பட்ட நிலையில் இது நடந்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கு ரஷ்யாவின் உள்ளூர் வர்த்தகம் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால் அதன் மதிப்பு மீட்கப்பட்டுள்ளது. இதுதவிர கச்சா எண்ணெய், கியாஸ் உள்ளிட்டவற்றை பெறும் நாடுகள் ரூபிள் மதிப்பில் வர்த்தகம் செய்வததும் ரஷ்யாவுக்கு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்கா கருத்து

அமெரிக்கா கருத்து

இதுகுறித்து அமெரிக்காவின் கருவூல் செயலாளர் ஜேட் யெல்லன் கூறுகயைில், ‛‛ரஷ்யாவிடம் இருந்து நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதன் மூலம் மற்ற நாடுகள் புதினை புறக்கணிப்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதை செய்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அது பிற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தவதோடு, ரஷ்யாவுக்கு சாதகமாகவும் அமையும். இந்த கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தான் ரூபிளின் மதிப்பை மீட்டெடுத்துள்ளது'' என்றார்.

 ரூபிள் மதிப்பு 78 ஆக மாறலாம்

ரூபிள் மதிப்பு 78 ஆக மாறலாம்

வெல்ஸ் பார்கோ செக்யூரிட்டீஸ் எல்எல்சியின் மூலாபாய நிபுணர் பிரெண்டன் மெக்கென்னா கூறுகையில், "ரூபிளின் ஸ்திரத்தன்மைக்கான எரிபொருட்களை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து வாங்குவது தான் காரணமாக இருக்கலாம். விரைவில் ஒரு டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 78 ஆக மாறலாம்'' என கூறினார். இன்ஸ்ட்டியூட் ஆப் இன்டர்நேஷனல் பைனான்ஸ் பொருளாதார நிபுணர்களாக எலினா ரிபகேவா, பெஞ்சமின் ஹில்ஜென்ஸ்டாக் கூறுகயைில், ரஷ்யா பொருளாதாரம் மற்றும் நிதித் துறையானது மூலதனக் கட்டுப்பாடுகள், நிர்வகிக்கப்பட்ட விலைகள் மற்றும் பொருளாதார தன்னாட்சிக்கு கு ஏற்பட சில செயல்பட்டு வருகிறது. தடைகள் தொடர்வதால் மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டுள்ளன'' என்றனர்.

Recommended Video

    திடீரென Russia-வை கண்டிக்கும் India..காரணம் Bucha | Oneindia Tamil
    இதற்கு முன்பு எப்படி

    இதற்கு முன்பு எப்படி

    சோவியத்துக்கு பிந்தைய ரஷ்யாவின் வரலாற்றில் ரூபிள்-டாலர் மாற்று விகிதம் தான் பொருளாதார குறிகாட்டியாக உள்ளது. 1990களின் முற்பகுதியில் பணவீக்கம் அதிகரித்ததால் ரஷ்யாவின் கரன்சி சரிவை சந்தித்தது. அதன்பிறகு 1998ல் ரஷ்யாவின் ரூபிள் சரிவை சந்தித்தது. 2008 நெருக்கடியின்போது நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், ரூபிள் சரிவை குறைக்கவும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட்டது. 2014ல் கவர்னர் எல்விரா நபியுல்லினா கிரிமியா இணைப்பு, கச்சா எண்ணெய் மீதான பொருளாதார தடையால் ரூபிள் நாணயத்தை சுதந்திரமான புழக்கத்துக்கு மாற்ற தூண்டியது. இந்த ஆண்டின் பொருளாதார தடைகளில் இருந்து மீளவும் ரஷ்யா மூலதனக் கொள்கைகளை இயற்றியது. அது ரூபிளை ஆதரிக்கும் வகையில் உள்ளது. இதற்கு உடன்படாதவர்களை புறக்கணிக்கவும்,முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் சொத்துக்களை முடக்குவதும், ரஷ்ய நிறுவனங்களில் வைத்திருக்கும் 80 சதவீத வெளிநாட்டு நாணய பங்குகளை ரூபிளாக மாற்றுவதும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Russia-Ukraine Crisis: Western nations, including the United States, have imposed sanctions on Russia, condemning the war in Ukraine. As a result, Russia's currency, the ruble, has depreciated and is now gaining value again. Key information has emerged about Russia's recovery of its ruble.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X