அமெரிக்காவுக்கு பேராபத்து.. ஒரு விமானதளம் கூட மிஞ்சாது.. ரஷ்யாவை அடித்த உக்ரைனால் பறந்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ரஷ்யா மீது உக்ரைன் அதிரடியாக ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ரஷ்யாவின் விமானப்படை தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில் 41 போர் விமானங்கள் வரை அழிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதல் என்பது உலகம் முழுவதும் பேசும் பொருளாகி உள்ள நிலையில் அமெரிக்காவுக்கு பேராபத்து நெருங்கி உள்ளதாக வார்னிங் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உள்ளேயும், அமெரிக்காவுக்கு சொந்தமாக பிற நாடுகளில் உள்ள விமானப்படை தளங்களில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக எக்ஸ்பர்ட்டுகள் வார்னிங் செய்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் இருநாடுகள் இடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் நாளுக்கு நாள் இருநாடுகள் இடையே போர் என்பது தீவிரமாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடத்தது. ரஷ்யாவின் எல்லயை கடந்து, 4000 கி.மீக்கு அப்பால் இருக்கும், அந்நாட்டின் விமானப்படை தளத்தை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன.

இதனால் கோபமடைந்த ரஷ்யா 400 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 4 பேர் வரை பலியாகி உள்ளனர். இதனால் இருநாடுகள் இடையேயான போர் என்பது உக்கிரமாகி உள்ளது. இந்நிலையில் தான் ரஷ்யாவின் விமானப்படை தளம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அமெரிக்காவுக்கு பேராபத்து உள்ளதாக வார்னிங் செய்யப்பட்டுள்ளது.

அதாவது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான விமானப்படை தளங்களில் போதிய பாதுகாப்பு என்பது இல்லை. அங்கு விலையுயர்ந்த போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தி அதனை அழிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் விமானப்படை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது சீனா, அமெரிக்கா இடையே மோதல் உள்ளது. இதனால் சீனாவுடன் போர் ஏற்பட்டால், சீன ராணுவம் அமெரிக்க விமானங்களை பெரிய அளவில் தாக்கும் என்று ஹட்சன் நிறுவனத்தின் அறிக்கை ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் ஏவுகணைகள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சிறப்புப் படைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம். இந்த தாக்குதல் என்பது அமெரிக்காவில் உள்ள விமான தளங்களையும் குறிவைத்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ரஷ்யாவின் விமானப்படை தளங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலை குறிப்பிட்டு அமெரிக்காவின் விமானப்படை தளபதி ஜெனரல் டேவிட் ஆல்வின் பாதுகாப்பு சார்ந்த கருத்தரங்கில் பேசினார். அப்போது அவர், "இது ஒரு முக்கியமான தருணம். அமெரிக்காவில் கூட பாதுகாப்பான இடம் இல்லை. குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளம் உள்பட எந்த விமானப்படை தளத்திலும் பாதுகாப்பு வசதிகள் இல்லை’’ என்று கூறினார்.

அதேபோல் ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ ஜெனரல் ஸ்டான்லி மெக்ரிஸ்டல் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‛‛நாம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறோம். நம்மிடம் அதிக மதிப்புள்ள சொத்துக்கள்(விமானங்கள்) நிறைய உள்ளன. அவை மிகவும் விலை உயர்ந்தவை" என்று தெரிவித்தார்.

ஹட்சன் இன்ஸ்டிடியூட்டின் 2024 அறிக்கையை சுட்டிக்காட்டி பாதுகாப்பு நிபுணர் தாமஸ் ஷுகார்ட் கூறுகையில், "அமெரிக்காவின் விமானப்படை தளங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. இதனால் ட்ரோன், ஏவுகணை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா பேரிழப்பை அடையும். குறிப்பாக தரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விமானங்களை அதிகமாக இழக்க நேரிடும் இந்த புதிய அச்சுறுத்தல் என்பது தாக்குதல்களை சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை இன்னும் தீவிரமாக்குகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்காவின் விமானப்படை தளங்கள் பாதுகாப்பாக இல்லை. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரும் சிக்கல் ஏற்படும் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+