"ஆசை" பிரகாஷ் ராஜையே மிஞ்சி விட்டார் இந்த ஹாங்காங் கிம்!

யோகா பந்தை பயன்படுத்தி மகள், மனைவியை கணவர் கொலை செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஹாங்காங்: நாடு விட்டு நாடு... கண்டம் விட்டு கண்டம்.. கிரகம் விட்டு கிரகம் என வாழ்ந்தாலும் இந்த கள்ளக்காதல் அங்கேயும் வந்துவிடுகிறது. இது ஒரு சீன கள்ளக்காதல் சம்பவம்!

ஹாங்காங் நகரில் 2005-ம் ஆண்டு ஒரு அம்மாவும் பெண்ணும் அவர்களது காரில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஆனால் எப்படி அவர்கள் இறந்தார்கள் என்றே தெரியவில்லை. போலீசார் வந்தனர். விசாரணையை துவக்கினர்.

எப்படி எப்படியோ மண்டையை போட்டு உருட்டி முட்டி முட்டி பார்த்துவிட்டார்கள்... இந்த கொலை எப்படி நடந்தது என்றே கண்டுபிடிக்கவே முடியவில்லை. தடயங்களும் கிடைக்கவில்லை. ஆதாரங்களும் கிடைக்கவில்லை. சாட்சியங்களும் கிடைக்கவில்லை.

 ஒரே ஒரு துருப்பு

ஒரே ஒரு துருப்பு

மண்டையே காய்ந்து விட்டது ஹாங்காங் போலீசாருக்கு. கடைசியில் ஒருவழியாக அதிக நேரம் கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால்தான் உயிரிழந்தார்கள் என்று தெரியவந்தது. அதுகூட கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான். இந்த ஒரு க்ளூ மட்டும்தான் கிடைத்தது. இருந்தாலும் அந்த ஒரு துப்பாவது கிடைத்ததே என்று ஆய்வில் இறங்கினர். அப்போது தாயும்-மகளும் இறந்த காருக்குள் யோகா செய்யும்போது பயன்படுத்தும் 2 பந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 எப்பவும் கண்டிஷன்தான்

எப்பவும் கண்டிஷன்தான்

அடுத்தடுத்த விசாரணைகளில்... சம்பந்தப்பட்ட கொலையாளியே கிடைத்துவிட்டார். இந்த கொலைகளை செய்தது வேறு யாருமல்ல பெண்ணின் கணவர்தான். அவர் பெயர் ஹா கிம்-சன். இவருக்கு ஒரு கள்ளக்காதலி இருந்திருக்கிறார். அதனை கண்டுபிடித்த மனைவி கணவனை கண்டித்துள்ளார். இந்த விஷயம் 16 வயது மகளுக்கு தெரிந்து மகளும் தகப்பனை கண்டித்துள்ளார். எப்ப பார்த்தாலும் அம்மாவும் பெண்ணும் கண்டிஷன் போட்டுக் கொண்டும், கள்ளக்காதலுக்கு தடையும் செய்து கொண்டிருந்ததால், இருவரையும் கொலை செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார்.

 மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

இவர் ஒரு மயக்கவியல் நிபுணராம். ஹாங்காங்கில் பெயர் போன மருத்துவர். என்ன படித்து என்ன? புத்தி ஒழுங்காக இல்லையே... கொலை செய்வதற்காக ஒரு மாஸ்டர் பிளான் ரெடி செய்தார். யோகா பந்துகளை தான் வேலைபார்க்கும் ஆய்வகத்திற்கு கொண்டு போனார். அந்த பந்துகளில் கார்பன்-மோனாக்ஸைடு காற்றை நிரப்பி கொண்டார். அப்படி நிரப்பிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்தவர்கள் இவரிடம் இதுபற்றி கேட்டார்களாம். அதற்கு வீட்டில் எலி தொல்லை ஜாஸ்தி..அதனால் கார்பன் மோனாக்சைடு வேணும் என்று சாக்கு சொல்லி இருக்கிறார்.

 சுவாசித்தே செத்தனர்

சுவாசித்தே செத்தனர்

வீட்டிற்கு வந்தால் காரில் மனைவியும் மகளும் உட்கார்ந்திருந்தனர். பிறகு காரை திறந்து யோகா பந்துகளை திறந்துவிட்டு காருக்குள் போட்டு விட்டார். கார் கதவுகளையும் வெளிப்பக்கம் பூட்டிவிட்டார். அந்த காற்றை சுவாசித்தே இரண்டு ஜீவன்களும் உயிரிழந்துள்ளனர். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் இவருக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

 கள்ளக்காதல் எனும் கிருமி

கள்ளக்காதல் எனும் கிருமி

'ஆசை' படத்தில் வில்லன் பிரகாஷ் ராஜ் இப்படித்தான் தனது மனைவியை பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி கொடூரமாக கொலை செய்வார். கிட்டத்தட்ட அதே பாணியில் இந்த கிம் நடந்து கொண்டுள்ளார். ஹாங்காங் அறிவாளியாகவே இருந்தாலும் படித்த படிப்பை இப்படி தவறாக பயன்படுத்தி குடும்பத்தையே நாசமாகி விட்டார்! தலைசிறந்த மருத்துவ நிபுணரே என்றாலும் கள்ளக்காதல் என்னும் கொடிய கிருமி வாழ்க்கையில் புகுந்து எல்லாவற்றையும் இழக்கவே செய்து விடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+