அழுத பாப்பாவை பொம்மையைக் காட்டி சிரிக்க வைத்த நாய்... 7 லட்சம் பேர் ரசித்த வீடியோ!
லண்டன்: அழுகிற குழந்தைக்கு பொம்மையைக் காட்டி நாயொன்று சமாதானப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிக மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் ஒன்றான நாய், வீட்டைக் காவல் காப்பதற்கு மட்டுமின்றி வீட்டில் ஒரு உறுப்பினராகவும் மாறி விடுகிறது. இதற்கு பின்வரும் சம்பவத்தையே நல்ல உதாரணமாகக் கூறலாம்.
வீட்டில் யாருமற்ற நேரத்தில் அழுகின்ற சிறுகுழந்தையை இந்த நாய் எப்படி சமாதானப் படுத்தி சிரிக்க வைக்கிறது எனப் பாருங்கள்....

அழுத குழந்தை....
இங்கிலாந்து குடும்பமொன்றில் சார்லி என்ற பெயரில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அவர்களது வீட்டில் லாரா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இக்குழந்தை ஒருநால் தொட்டிலில் படுத்தபடி தொடர்ந்து அழுதபடி உள்ளது.

சமாதானமாகவில்லை...
குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத நாய், உடனடியாக ஓடிச் சென்று அலமாரியில் உள்ள பொம்மை ஒன்றை எடுத்து வருகிறது. ஆனால், அப்பொம்மையைப் பார்த்துக் குழந்தை சமாதானம் ஆகவில்லை.

சிரிக்கும் பாப்பா....
இதனால், மீண்டும் ஓடிச் சென்று வேறொரு பொம்மையை எடுத்து வருகிறது சார்லி. இப்போது குழந்தை அப்பொம்மையுடன் அழுகையை நிறுத்தி விட்டு விளையாடத் தொடங்குகிறது.

மன்னிக்க மாட்டாயா...?
லாராவின் பொம்மைகளை நாய் சார்லி திருடிச் சென்று விளையாடியதாகவும், அதனாலேயே குழந்தை அழுததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், மன்னிப்பு கோரும் விதமாகவே, அது மீண்டும் மீண்டும் பொம்மைகளைக் கொண்டு வந்து தருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

7 லட்சம் ரசிகர்கள்...
இக்காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

நண்பேண்டா....
இந்த வீடியோவை லாராவின் தந்தை தான் பதிவேற்றம் செய்துள்ளார். லாராவும், சார்லியும் நண்பர்களாக பழகுவதாக அவர் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் பக்கம்...
சார்லி நாயின் இந்த கருணை மற்றும் சாதுர்யமான நடவடிக்கைக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். இதனால், சார்லியின் பெயரில் பேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் அவ்வப்போது சார்லியின் சாகச நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications