For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் பதற்றமாக இருந்தேன்...சிறந்த திறமையை வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்ல உறுதி பூண்டேன் - மீராபாய்

என்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்வது என்று உறுதி பூண்டேன் என்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டோக்கியோ : நான் பதற்றமாக இருந்தேன் ஏனெனில் நாடே என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது என்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்வது என்று உறுதி பூண்டேன் என்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் கூறியுள்ளார்.

Recommended Video

    Who Is Mirabai Chanu? India’s first medal at Tokyo Olympics 2020

    மணிப்பூரின் மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியில் தோன்றி விறகு சுமந்த மீராபாய் சானு அதே கைகளால் ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் தேசத்தின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தியிருக்கிறார்.

    2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தனக்கு ஏற்பட்ட தோல்வியே டோக்கியோ வெற்றிக்கு படிக்கட்டாக அமைந்தது என்று கூறியுள்ளார் மீராபாய் சானு.

    ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    தோல்வி கற்றுக்கொடுத்த பாடம்

    தோல்வி கற்றுக்கொடுத்த பாடம்

    ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தோல்வி கண்ட மீராபாய் சானு அதன் பிறகு கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் கடினமாக உழைத்து எந்தவித பிசிறும் இல்லாமல் கிளீனாக எடைத்தூக்கி 119 கிலோ என்ற உலகச் சாதனையுடன் டோக்கியோ வந்தார். ஒலிம்பிக் வெள்ளி வென்ற முதல் பளுதூக்கும் வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

    தங்கம் வென்ற மீரா சானு

    தங்கம் வென்ற மீரா சானு

    2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இவரால் ஜெயிக்க முடியவில்லை, அதுவே மன அழுத்தத்தையும் ஒருவித துயரத்தையும் கொடுத்தது. அதிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டில் மீண்டெழுந்த மீராபாய் சானு உலக சாம்பியன்ஷிப் பளுத்தூக்குதலில் தங்கம் வென்று உலக சாதனை புரிந்தார்.

    தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கை

    2018ஆம் ஆண்டின் பெரும்பகுதி முதுகு வலியால் அவதியுற்று வந்தார். பிறகு மீண்டு வந்த மீராபாய் 2019 உலக சாம்பியன்ஷிப்பில் ரெக்கார்ட் 200 கிலோ எடைத்தூக்கி சாதனை புரிந்தார். இது 4ம் இடத்தைப் பெற்றுத்தந்தாலும் அவரது தன்னம்பிக்கை முதலிடம் பெற்றது.

    வெள்ளிப்பதக்கம்

    வெள்ளிப்பதக்கம்

    2021ஆம் ஆண்டில் ஆசிய பளுத்தூக்கும் சாம்பியன்ஷிப்பில் 119 கிலோ எடைத்தூக்கி புதிய சாதனை படைத்தார். இந்த சாதனையே அவருக்கு டோக்கியோ செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
    அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட மீராபாய் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் முதல் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

    உறவினர்கள் உற்சாகம்

    உறவினர்கள் உற்சாகம்

    மீராபாய் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று எடை தூக்கியபோது அவரது உறவினர்கள் சொந்த கிராமத்தில் தொலைக்காட்சி மூலம் போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தனர். மீரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடன் அனைவரும் உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    நாடே பார்த்துக்கொண்டிருந்தது

    நாடே பார்த்துக்கொண்டிருந்தது

    பதக்கம் வென்றது கூறியுள்ள மீராபாய் சானு , நான் பதற்றமாக இருந்தேன் ஏனெனில் நாடே என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது என்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்வது என்று உறுதி பூண்டேன்.

    தவறுகளை திருத்தினேன்

    தவறுகளை திருத்தினேன்

    ரியோ ஒலிம்பிக் பின்னடைவுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன், தவறு எங்கு செய்கிறேன் என்று தெரிந்து கொண்டு திருத்தினேன். ரியோ தோல்வியினால்தான் நான் இப்போது இங்கு இருக்கிறேன். நான் மிகவும் துயருற்றேன், இப்போது இங்கே நான் இருக்கிறேன் என்றால் ரியோ தோல்விதான் காரணம் என்று கூறியுள்ளார் மீராபாய் சானு.

    English summary
    I was nervous because the whole nation was looking at me. But some how I was determined to show my best talent and win the medal Said Meerabai Chanu, who won a silver medal at the Tokyo Olympics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X