10 நாள் கூட பாகிஸ்தான் தாங்காது..இந்தியாவுடன் கைகோர்க்கும் ’நண்பர்கள்’..கடைசி 2 நாடுகள்தான் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளும் போர் விமானங்களை இயக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணை சோதனையும் நடைபெறும் நிலையில் பாகிஸ்தான் மீது எப்போது வேண்டுமானாலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு எந்தெந்த நாடுகள் ஆதரவாக இருக்கும் என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம் அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

india pakistan us

காஷ்மீர் தாக்குதல்

இது ஒரு புறம் இருக்க இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

போர் அபாயம்:

ஒருவேளை எதிர்பாராத விதமாக போர் உருவாகும் பட்சத்தில் உலகின் பல முக்கிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஆதரவாக நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, ஈரான்,ஆப்கானிஸ்தானின் சில அமைப்புகள் மட்டுமே உறுதியான ஆதரவை அளிக்கும் என்ற கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும் பொருளாதாரம் அது ஏற்படுத்தும் உலக ரீதியான தாக்கம், ராணுவ சக்தி ஆகியவற்றின் காரணமாக உலகத்தின் அதிக ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா:

போர் மூண்டால் இந்தியாவுக்கு முதல் நாடாக அமெரிக்காவே ஆதரவாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா இந்தியா இடையே ஸ்ட்ரேட்டரஜிக் பார்ட்னர்ஷிப் எனப்படும் பாதுகாப்பு உறவுகள் உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் அமைப்பில் இருக்கிறது. ஏற்கனவே இரு நாடுகள் இடையே தீவிரவாத எதிர்ப்பு, உளவுத்துறை தகவல் பகிர்வு, ராணுவ ஒத்துழைப்பு, ஆயுத பரிமாற்றம் ஆகியவற்றில் நெருங்கிய தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சீனா நெருக்கம் அதிகரித்து ஒரு நிலையில் அதனை அமெரிக்கா எதிர்ப்பதோடு இந்தியாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்:

இந்தியாவின் முக்கிய ஆயுத விற்பனையாளர்களில் முக்கிய நாடு என்றால் அது இஸ்ரேல் தான். இந்தியாவுக்கு தேவையான கண்காணிப்பு ட்ரோன்கள், ரேடார்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை இஸ்ரேல் வழங்கி உள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான சில தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானிலும் செயல்பட்டு வருவதால் நிச்சயம் இந்தியாவும் இஸ்ரேலும் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா:

ராணுவத்திலும் ஒத்துழைப்பிலும் நீண்ட காலமாக இந்தியாவின் நம்பிக்கைகுரிய ஒரு கூட்டாளி என்றால் அது ரஷ்யா தான். ஏற்கனவே ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளை ரஷ்யா செய்திருக்கிறது. எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, போர்விமானங்கள், அணு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சார்ந்த துறைகளில் நாடுகளும் நல்ல நட்பில் உள்ளன. சீனா -பாகிஸ்தான் -ரஷ்யா இடையே நட்பு இருந்தாலும் இந்தியா இந்தியாவுடன் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் ரஷ்யா நெருக்கம் காட்டி வருகிறது. பாகிஸ்தானுடன் போர் வந்தால் நேரடியாக ராணுவ உதவி ரஷ்யாவால் வழங்கப்படாது என்றாலும் ஆயுதங்கள், உபகரணங்களை வழங்கும்.

பிரான்ஸ்:

மேற்கண்ட 3 நாடுகளுக்கு அடுத்ததாக நான்காவது நட்பு நாடு என்றால் அது பிரான்ஸ் தான். ஏற்கனவே இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் வழங்கி இருக்கிறது. ஏற்கனவே பலமுறை கப்பற்படை பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தில் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு வழங்கும் முக்கியமான நாடு என்றால் அது பிரான்ஸ் தான். கடந்த சில ஆண்டுகளாகவே பிரான்ஸ் இந்தியாவுக்கு இடையேயான நெருக்கம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான்:

குவாட் கூட்டணியின் முக்கிய நாடு என்றால் அது ஜப்பான். சீனாவுக்கு எதிர்ப்பு சக்தியாக இந்தியாவை ஜப்பான் பார்க்கிறது. தொழில், பொருளாதாரம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் ஒரு நீண்ட நெடிய ஒத்துழைப்பு இருக்கிறது. நேரடியாக போரில் இறங்காவிட்டாலும் பொருளாதார உதவிகள், அமெரிக்கா வழியில் துணை நிதி ஆதரவு, ஊடக ஆதரவு உள்ளிட்டவை ஜப்பான் மூலம் கிடைக்கும்.

ஆஸ்திரேலியா:

அடுத்தபடியாக குவாட் கூட்டணியில் இருக்கும் ஆஸ்திரேலியா இந்தியாவுடன் பாதுகாப்பு மற்றும் கடற்படை ஒத்துழைப்பை மேற்கொண்டு இருக்கிறது. இந்தியா பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா தொடர்ந்து இந்தியாவுடன் பயணித்து வருகிறது.

யூஎஎ & சவூதி:

இது மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சவுதி அரேபியாவின் நாடுகளும் கடந்த காலங்களில் இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா அரபு உலகத்திற்கு இடையான உறவுகள் வளர்ச்சி பெற்று உள்ளதும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக துணை நிற்கும் என்கின்றனர்.

இந்தியாவின் பலம்:

இதன்மூலம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பிற நாடுகள் ராணுவ உதவிகள் வழங்கினாலும் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் எந்த நாடும் நேரடியாக ராணுவ உதவி வழங்கவில்லை என்றாலும், இந்தியாவின் ராணுவ பலம் மிக அதிகமாக இருக்கிறது. உலக அளவில் நான்காவது பெரிய ராணுவ பலம் கொண்ட நாடு இந்தியா என்பதும், பாகிஸ்தான் 12வது இடத்தில் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். கப்பல் படை, தரைப்படை, விமானப்படை என முப்படைகளிலும், துணை ராணுவ படையிலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+