Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா போரை தொடங்கினால் 4 நாளில் வெற்றி பெறும்.. உக்ரைனால் பாகிஸ்தானுக்கு வந்த பிரச்சனை.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தானில் தற்போது ஆயுத பற்றாக்குறை உள்ளதாகவும், இதனால் போரை தொடங்கினால் வெறும் 4 நாளில் இந்தியா வெற்றி பெறலாம் எனவும், இதன் பின்னணியில் உக்ரைனுக்கு முக்கிய காரணம் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் குண்டு பாய்ந்து பலியாகினர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு தான் பொறுப்பேற்று உள்ளது.

if-war-happens-pakistan-can-only-fight-for-4-days-against-india-due-to-weapons-shortage-after-export

இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் பாகிஸ்தான் மீது நம் படை வீரர்கள் தாக்குதல் நடத்துவார்கள். இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானும் நம் மீது பதில் தாக்குதலை நடத்தும். இதனால் மோதல் வலுத்து போராக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் எனவும், வெறும் 4 நாளில் பாகிஸ்தான் படைகள் நம் நாட்டிடம் மண்டியிட வாய்ப்புள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். உலகின் வல்லரசு நாடான ரஷ்யா 3 ஆண்டுகளை கடந்தும் போர் புரிந்து வந்தாலும் இன்னும் உக்ரைனை கைப்பற்றவில்லை. அதேபோல் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக உள்ள காசாவில் பலம் வாய்ந்த இஸ்ரேல் 18 மாதமாக போர் புரிந்து வந்தாலும் கூட இன்னும் வெல்லவில்லை. அப்படி என்றால் இந்தியாவால் மட்டும் எப்படி பாகிஸ்தானை 4 நாளில் வெல்ல முடியும் என்ற கேள்வி வரலாம்.

ஆனால் இதற்கு பாகிஸ்தானில் நிலவும் ஆயுத பற்றாக்குறை தான் காரணமாக உள்ளது. அதாவது பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. நாட்டில் கடன் என்பது அதிகரித்துள்ளது. பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. அதேபோல் அந்நிய செலாவணி கையிருப்பும் கரைந்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பாகிஸ்தானில் ஆயுதப்பற்றாக்குறை என்பது அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி விமானங்கள் உள்பட போரை சமாளிக்க தேவையான ஆயுதங்கள் நவீனமயமாக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் ராணுவம் மிகவும் வலிமையாக உள்ளது. பீரங்கி மற்றும் டாங்கிகள் நிறைய உள்ளன. ஆனால் பாகிஸ்தானை எடுத்துகொண்டால் M109 ஹோவிட்சர் ரக பீரங்கிகளும், BM -21 லாஞ்சர்ஸ்கள் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதன்மூலம் எதிரிகள் மீது எளிதாக பாகிஸ்தானால் தாக்குதல் நடத்த முடியும். ஆனால் எம்109 ஹாவிட்சர் பீரங்கிகளுக்கு தேவையான 155 மிமீ குண்டுகளும், பிஎம் -21ரக லாஞ்சர்ஸ்களுக்கான 122 மிமீ ராக்கெட்டுகளும் பற்றாக்குறையாக உள்ளது. இது பாகிஸ்தானின் படை பலத்தை பலவீனமாக்கி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் தான். சமீபத்தில் உக்ரைனுடன், பாகிஸ்தான் ஆயுத ஒப்பந்தம் செய்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரை சமாளிக்க பாகிஸ்தானிடம் இருந்து 155 மிமீ குண்டுகளை உக்ரைன் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து குண்டுகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தானில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் - உக்ரைன் இடையே எப்போதும் நெருங்கிய நட்பு உள்ளது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் உக்ரைன் எப்போதும் பாகிஸ்தான் பக்கம் தான் நிற்கும். இதனால் தான் உக்ரைன் மீதான போரில் கூட நம் நாடு தொடக்கத்தில் உக்ரைனுக்கு பிடி கொடுக்காமல் இருந்தது.

இப்போது உக்ரைனுக்கு ஒப்பந்தத்தின் படி அதிகமான 155 மிமீ குண்டுகளை பாகிஸ்தான் வழங்கிய நிலையில் அது பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலைகள் ஆயுத தயாரிப்பில் சுணக்கத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளுக்கான தேவைகள் மட்டுமின்றி உள்நாட்டுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பாகிஸ்தானின் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் ராணுவம் கவலையில் உள்ளது. மே 2ம் தேதி சிறப்பு படை தளபதிகள் ஆலோசனை கூட்டத்திலும் இந்த ஆயுத பற்றாக்குறை பற்றி ராணுவத்தினர் கவலையை பகிர்ந்துள்ளனர்.

அதற்கு முன்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவும் இதுபற்றி கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர், ‛‛இந்தியாவுடன் நீண்டகாலம் போரிடுவதற்கு தேவையான ஆயுதங்கள், பொருளாதார வலிமை இல்லை'' என்று அவர் கூறியிருந்தது இங்கே கவனிக்கத்தக்கது. மேலும் போர் நடந்தால் 86 மணிநேரம் அதாவது 4 நாட்களுக்கு தேவையான ஆயுதங்கள் மட்டுமே பாகிஸ்தான் கையில் இருப்பதாகவும், இதனால் எளிதாக இந்தியா வெல்லும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இருப்பினும் போர் என்று வந்தால் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உதவி செய்யலாம். அந்த நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வழங்கப்படலாம் என்பதால் பாகிஸ்தானையும் லேசாக எடுத்து கொள்ளக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். இதனால் தான் பாகிஸ்தானின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது தொடர்பாக விரிவான அறிந்து கொள்ள தான் உடனடியாக தாக்குதலை நடத்தாமல் நம் நாடு உள்ளது. இருப்பினும் எதிரியான பாகிஸ்தானின் பலம், பலவீனம் அறிந்து நம் படைகள் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+