3 மணி நேரம் நடைபெற்ற குடல் அறுவை சிகிச்சை... போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம்..!
ரோம்: குடல் அறுவை சிகிச்சைக்கு பிறகு போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் குடலில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரோம் நகரில் ஜெமெல்லி மருத்துவமனையில் அவருக்கு குடல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. போப் ஆண்டவர் உடல்நிலை மீது மருத்துவர்கள் குழு தீவிர கவனம் செலுத்தியதோடு 3 மணி நேரத்துக்கும் மேலாக அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
84 வயதான போப் ஆணடவர் பிரான்ஸிஸ்க்கு வயது மூப்பு காரணமாக ஸ்பாண்டிலிடிஸ் எனப்படும் கீழ் முதுகு வலியும் உள்ளது. இதற்கு அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே போப் ஆண்டவர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்தியோ புருனி, போப் ஆண்டவர் விரைந்து குணம் அடைந்து வருவதாகவும், உணவு உட்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு நேற்று முதல்முறையாக சிறிதளவு நடைபயிற்சியும் செய்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இன்னும் ஒரு சில நாட்கள் ஜெமெல்லி மருத்துவமனையிலேயே தங்கி போப் ஆண்டவர் ஓய்வெடுப்பார் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications