Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Imran Khan: பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் கொலை? தீயாக பரவும் போட்டோ! சிறையில் கொல்லப்பட்டதாக பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் இப்போது ஊழல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறையில் வைத்து அவர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் பரவி வருகிறது. மேலும், இது தொடர்பான சில அதிர்ச்சி போட்டோக்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தார். 2022ல் திடீரென அவருக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. கூட்டணிக் கட்சிகளே திடீரென தங்கள் ஆதரவை விலகிக்கொண்டதால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Imran Khan Assassinated in Jail Unverified Rumors Claim ISI Chief Asim Munir Ordered Killing

இம்ரான் கான்

அதேநேரம் தன் மீது தவறில்லை என்றே இம்ரான் கான் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார். மேலும், தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார். இதற்கிடையே இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவி வருகிறது.

மரணம்?

சிறையில் வைத்து பிரதமர் இம்ரான் கான் கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ராவல்பிண்டியில் உள்ள அடயலா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தகவல்களைப் பாகிஸ்தான் அரசு அல்லது சிறை நிர்வாகம் என யாரும் உறுதிப்படுத்தவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும், பாகிஸ்தான் நாட்டில் நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக ட்வீட் செய்து வருகிறார்கள். அப்படி தான் ஒரு ட்விட்டர் கணக்கில், "பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மற்றும் அவரது ஐஎஸ்ஐ நிர்வாகத்தினர் இணைந்து சிறையில் இருந்த இம்ரான் கானை கொன்றுவிட்டனர். இந்த தகவல் உண்மையாக இருந்தால், அது பாகிஸ்தானில் அரசு பயங்கரவாதம் உச்சத்தைத் தொட்டுவிட்டதைக் காட்டுகிறது. சீக்கிரமே உண்மைகள் உலகிற்குத் தெரிய வரும்" எனப் பதிவிட்டுள்ளனர்.

ஷாக் போட்டோ

மேலும், இம்ரான் கான் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும் ஒரு போட்டோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இம்ரான் கான் உயிரிழந்துள்ளதாகச் சொல்லி சில வீடியோவும் கூட பரவி வருகிறது. இருப்பினும், அதுவும் கூட அதிகாரப்பூர்வமாக எந்தவொரு பாகிஸ்தான் அரசு நிர்வாகமும் உறுதி செய்யவில்லை. இவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது எடிட் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கான் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளார். ஊழல் வழக்குகளில் அவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாகவே இம்ரான் கானை சுற்றி சர்ச்சை எழுந்துள்ளது. வெளியாட்கள் யாரும் இம்ரான் கானை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. கைபர் பக்துன்வா மாகாண முதல்வர் சோஹைல் அப்ரிடி, இம்ரான் கானை சந்திக்கச் சென்றுள்ளார். இருப்பினும், அவருக்கும் அனுமதி தரப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.

அனுமதி இல்லை

கடந்த வாரம் அவரது மூன்று சகோதரிகளான நூரீன் கான், அலீமா கான் மற்றும் உஸ்மா கான் ஆகியோர் இம்ரான் கானை அடயலா சிறைக்கு அவரை சந்திக்கச் சென்றனர். இருப்பினும், அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் சிறை வாசலிலேயே உட்கார்ந்து 10 மணி நேரம் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார், அங்கிருந்து அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+