"கொலை முயற்சி!" மறைந்திருந்த பல முறை சுட்ட இளைஞர்.. அப்படியே சரிந்த இம்ரான் கான்.. மோசமான காயம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்ட பேரணியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இருப்பினும், திடீரென அப்போது கூட்டணிக்குள்ளேயே இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

 இம்ரான் கான்

இம்ரான் கான்

இருப்பினும், வெளிநாட்டுச் சூழ்ச்சி காரணமாகவே தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக இம்ரான் கான் கூறி வருகிறார். மேலும், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்போதுள்ள நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் போராட்டம் நடத்தி வருகிறார்.

 துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வந்த அவர், சில நாட்களில் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட உள்ளதாக அறிவித்து இருந்தார். இதனிடையே யாரும் எதிர்பார்காகத வகையில் இன்று அவர் கலந்து கொண்ட பேரணியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அவரை கொலை செய்யக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.

 எப்படி

எப்படி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்தில் அவர் பேசிக் கொண்டு இருந்தார். அவரது பேச்சை கேட் அங்குப் பல நூறு பேர் திரண்டு இருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இளைஞன் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இம்ரான் கானை நோக்கிச் சுட்டார். அங்குக் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இளைஞரால் சரியாகக் குறி பார்த்துச் சுட முடியவில்லை.

 பெனாசிர் பூட்டோ

பெனாசிர் பூட்டோ

இருப்பினும், அந்த துப்பாக்கிக் குண்டு இம்ரான் கானின் வலது காலில் பாய்ந்ததுள்ளது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007ஆம் ஆண்டு இதேபோல தான் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது,

 ஷாக் வீடியோ

ஷாக் வீடியோ

நல்வாய்ப்பாக இம்ரான் கானுக்கு மோமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு சில நிமிடங்கள் முன்னால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் தனது கருப்பு எஸ்யூவியில் இருந்து மக்களிடையே பேச கண்டெய்னர் டிரக்கில் இம்ரான் கான் ஏறுவது ஏறுவது தெரிகிறது. கண்டெய்னர் ஏறிப் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

 யார் அந்த இளைஞர்

யார் அந்த இளைஞர்


இம்ரான் கான் பேசிக் கொண்டு இருந்த போது, அவரது இடது புறத்தில் இருந்து அந்த இளைஞர் சுட்டுள்ளான். இருப்பினும், இம்ரான் கானின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி இளைஞர், அங்கிருந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+