ஊதா நிற பையுடன்.. துபாய்க்கு தப்பிய இம்ரான் கான் மனைவியின் "ப்ரண்ட்.." பரபரக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் இம்ரான் கானின் மனைவியின் தோழி 90 ஆயிரம் டாலர் பணப்பையை எடுத்துக் கொண்டு துபாய் தப்பி சென்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டன. இதையடுத்து இம்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார். இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்குமாறு இம்ரான் கானை அவர் கேட்டுக் கொண்டார்.

புதிய அரசு அமையும்
இதனால் புதிய அரசு அமையும் வரை அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார். பாகிஸ்தானில் நடைபெறும் அரசியல் குழப்பத்தால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இம்ரான் கானின் 3ஆவது மனைவி பஷ்ராபீவியின் நெருங்கிய தோழியாக இருப்பவர் ஃபரா கான்.

செல்வாக்கு
இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகள் இடமாற்றம், உயர் பதவிகளுக்கு நியமனம் உள்ளிட்டவைக்கு கோடிக்கணக்கில் லஞ்சமாக பணத்தை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இம்ரான் கான் மற்றும் அவரது 3ஆவது மனைவியின் உதவியுடன்தான் ஃபரா கான் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் நெருக்கடி
தற்போது இம்ரான் கான் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் புதிய அரசு அமைந்துவிட்டால் தான் கைது செய்யப்படுவோம் என எண்ணிய ஃபரா கான் கடந்த இரு நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவர் சுமார் 90 ஆயிரம் டாலர் மதிப்பிலான பணத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஃபரா கான்
ஃபராகான் தனி விமானத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எதிர்க்கட்சிகள் வைரலாக்கி வருகின்றன. அதில் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டுள்ள ஃபரா கான் மஞ்சள் நிறத்தில் விலையுயர்ந்த காலணியை அணிந்துள்ளார். அவர் வைத்திருக்கும் ஊதா நிற பையில்தான் 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருப்பதாக தெரிகிறது.

50 ஆயிரம் டாலர் கட்டணம்
இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் ஃபரா கான் செல்லும் விமானத்தில் டிக்கெட்டே 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக இருக்கும். அவர் அணிந்திருப்பது ஹெர்மீஸ் காலணிகள் என்கிறார்கள் நெட்டிசன்கள். ஃபரா கான் செய்த ஊழல் மூலம் 32 மில்லியன் டாலர் கிடைத்திருக்கும் என எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். இவரது கணவர் அஸ்கான் ஜமுல்குசார் ஏற்கெனவே அமெரிக்காவுக்கு தப்பி விட்டார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications